தஞ்சாவூரில் ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர்கள் 5ஆவது மாநிலப் பேரவை 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.28இல் மாநிலம் தழுவிய தர்ணா
22 Sept 2026, 9:03 pm

தஞ்சாவூரில் ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர்கள் 5ஆவது மாநிலப் பேரவை 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.28இல் மாநிலம் தழுவிய தர்ணா

தஞ்சாவூர், செப்.22-தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் 5ஆவது மாநிலப் பேரவை, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை, ஸ்ரீ விநாயகா திருமணமஹாலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் தீ.ச.வி.மூர்த்தி தலைமை வகித்தார். கௌரவத் தலைவர் மு.பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். வரவேற்புக் குழுத் தலைவர் இரா.கலியமூர்த்தி வரவேற்றார். மாநில துணைத் தலைவர்அ.ஜான் செல்வராஜ் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் வெ.சோமசுந்தரம் துவக்கவுரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் பா.ரவி வேலை அறிக்கை, மாநிலப் பொருளாளர் வை.நாகராஜன் நிதிநிலை அறிக்கையை முன்வைத்துப் பேசினர். அகில இந்திய மாநில ஓய்வூதியர் சம்மேளனத்தின் உதவி பொதுச் செயலாளர்பி.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார்.

தஞ்சாவூர் மாவட்டக் கருவூல அலுவலர் ஆ.விஜயலெட்சுமி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர்கள் ந.திருவேரங்கன், சீ.காந்திமதிநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநில துணைத்தலைவர்கள் இரா.சுப்ரமணியம், ஆ.சுந்தரமூர்த்தி நாயனார், இர.நடராஜன், ஏ.பி.முருகேசன், ப.திரவியம், பொ.மோகன்ராஜ், மாநிலச் செயலாளர்கள் ச.கோமதிநாயகம், வ.எ.யுவராஜ்,சி.சுப்பிரமணியன், அ.கென்னடி பூபாலராயன், சீ.புஷ்பநாதன், இரா.செந்தில்குமார், மாநிலத் தணிக்கையாளர்கள் ச.ராமமூர்த்தி, வி.முருகேசன் ஆகியோர் அமைப்பு விதிகள் திருத்தம் மற்றும் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினர். தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்க மாநிலத் தலைவர் ந.ஜெயச்சந்திரன் நிறைவுரையாற்றினார். நிறைவாக, வரவேற்புக்குழு செயலாளர் கோ.ஆனந்தராவ் நன்றி கூறினார். மாநாட்டில், காலியாக உள்ள மாநில செயலாளர் பொறுப்பி ற்கு, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.கருணாகரன் தேர்வுசெய்யப்பட்டார்.

தீர்மானங்கள்

பேரவைக் கூட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற 17ஆவது பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப்பொறுப்பேற்றுள்ள தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து ஓய்வூதியர்கள் நலன் தொடர்பாக உள்ளிட்ட 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முக்கிய தீர்மானங்கள் வருமாறு:

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகளுக்கு விரைந்து தீர்வு கண்டு,ஓய்வூதியப் பயன்களை உடனடியாக வழங்க வேண்டும். தற்காலிகப் பணிநீக்கத்தில் இருந்து ஓய்வு பெற அனுமதிக்கப்பட்டவர்கள் ஓய்வூதியப் பயன்கள் பெறுவதில் உள்ள இடர்பாடுகளைக் களையவேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தைரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தைஅமல்படுத்த வேண்டும். 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கருணை அடிப்படைநியமனங்களை முந்தைய நடைமுறைப்படி காலிப்பணியிடங்களில் 25 சதவீதம் என்ற அடிப்படையில் அனுமதிக்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டின்படி, இளநிலைப் பொறியாளர்களுக்கு உதவிப் பொறியாளர்களுக்கு இணையாக ஊதியம் நிர்ணயித்து, அதனடிப்படையில் ஓய்வூதியப் பயன்களை அனுமதிக்க வேண்டும்.ஊராட்சிச் செயலாளர் பணிக்காலத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியக் கணக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளும் வகையில் பொது அரசாணை வெளியிட வேண் டும். தருமபுரி மாவட்ட மேம்பாட்டுக் கழகம்மற்றும் புதுக்கோட்டை மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைச் சங்கத்தில் பல்லாண்டு பணியாற்றியவர்களுக்கு முறையாகப் பணி வரன்முறை செய்து, ஓய்வூதியப் பயன்களை அனுமதித்து ஆணையிடவேண்டும் உள்ளிட்ட 30 தீர்மானங்கள்கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

போராட்ட அறிவிப்பு

மேலும், அக்டோபர் 28 அன்று தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு அரை நாள் கவனஈர்ப்பு தர்ணா போராட்டம் நடத்துவது எனவும், போராட்ட முடிவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், அரசு முதன்மைச் செயலாளர், ஊரக வளர்ச்சி ஆணையர், உள்ளாட்சி நிதி தணிக்கை துறை சிறப்பு இயக்குனர் ஆகியோருக்கு 16 அம்ச கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றிட வலியுறுத்தி அனைத்து மாவட்ட மையங்களில் இருந்தும், விரைவு தபால் மூலம் கோரிக்கை முறையீடு இயக்கம் நடத்துவது இந்த பேரவையில் முடிவு செய்யப்பட்டது.

மாநிலப் பேரவையில் 80 வயது நிறைவடைந்த மூத்த தோழர்களை, மாவட்டத் தலைவர் ச.பால்ராஜ், தஞ்சை கோட்டத் தலைவர் சு.ராமச்சந்திரன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் சு.ஜெயராமன், மாவட்டப் பொருளாளர் உ.ராகவன், பட்டுக்கோட்டை கோட்டத் தலைவர் இரா.மோகன்தாஸ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் என்.ராஜம்மாள் ஆகியோர் கௌரவித்து சிறப்பு செய்தனர். மேலும், கடந்த ஓராண்டு காலத்தில் அதிக உறுப்பினர்களைச் சேர்த்து முதலிடம் பெற்ற சேலம், கடலூர், இரண்டாமிடம் பெற்ற திருவண்ணாமலை, மூன்றாமிடம் பெற்ற நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டப்பட்டது. இம்மாநிலப் பேரவையில், தமிழகம் முழுவதிலும் இருந்து 38 மாவட்டங்களைச் சேர்ந்த 287 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.