தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஊரக வளர்ச்சி - ஊராட்சித் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

28 Oct 2026, 8:32 pm
ஊரக வளர்ச்சி - ஊராட்சித் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சி - ஊராட்சித் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தென்காசி, அக்.28-ஓய்வூதியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள், புகார் மனுக்கள் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைகள்,துறைரீதியான விசாரணைகள் ஆகியவற்றை அரசு நிர்ணயித்த காலவரையறைக்குள் முடிக்க வேண்டும்.காலமுறை ஊதியத்தின் கீழ் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஊராட்சி செயலாளர்களின் பணிக்காலத்தில் 50 சதவீதத்தைக் கணக்கில் கொண்டு ஓய்வூதியப் பயன்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தின் சார்பில் தென்காசி,தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சி. கருப்பையா தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் ஞா. துரை டேனியல் விளக்கிப் பேசினார்.அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் பேராசிரியை ந. சங்கரி சிறப்புரையாற்றினார். மாநிலத் துணைத் தலைவர் ஆ.சுந்தரமூர்த்தி நாயனார் நிறைவுரையாற்றினார். தோழமைச்சங்க நிர்வாகிகள் ஆதரித்துப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பலர் பங்கேற்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோமதி சங்கர் தலைமை வகித்தார் . அரசு ஊழியர் சங்கத்தின் மேனாள் மாநில துணைப் பொதுச் செயலாளர் வெங்கடேசன் துவக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் சமஸ்தானம்விளக்கி பேசினார். மாநில துணைத்தலைவர் திரவியம் நிறைவுரையாற்றினார்.

​நெல்லை

நெல்லை வண்ணாரப்பேட்டை மேம்பாலத்தின் கீழ் புதன்கிழமையன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கோட்டதலைவர் கணபதி தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் விளக்கிப் பேசினார். அரசுஅனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் எஸ்.ஆறுமுகம் நிறைவுரையாற்றினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.