ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் 3 கட்ட போராட்ட அறிவிப்பு
27 Sept 2026, 2:31 am

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் 3 கட்ட போராட்ட அறிவிப்பு

தருமபுரி, செப்.26-தொலைதூர பணியிடமாறுதலை ரத்து செய்யக்கோரி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர்மூன்று கட்ட போராட்டங்களை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சிதுறை அலுவலர் சங்கத்தின்தருமபுரி மாவட்ட செயற்குழு கூட்டம்,ஆர்.டி.நகரில் உள்ள அச்சங்க அலுவலகத்தில் சனியன்று நடைபெற்றது. சங்கத்தின்மாவட்டத் தலைவர் முகமது இலியாஸ்தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ச.இளங்குமரன், மாவட்டச் செயலாளர் தருமன், பொருளாளர் வினோத் குமார்,மாநில செயற்குழு உறுப்பினர் பிரினஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்டம், வறட்சி மற்றும் டெங்கு காய்ச்சல் பரவல் உள்ளிட்ட சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள்தொலைதூரப் பணியிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் ஊழியர்களின் குழந்தைகளின் கல்வியும், குடும்பங்களும் பாதிக்கப்படுகிறது. எனவே, தொலைதூரப் பணியிட மாறுதல்களை ரத்து செய்து, வெளிப்படையான கலந்தாய்வு முறையில் பணியிட மாறுதல்களை மேற்கொள்ள வலியுறுத்தி, தமிழ்நாடுஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம்

மூன்று கட்டப் போராட்டத்தை அறிவித்துள்ளது.

அதன்படி, செப்.29 ஆம் தேதியன்று அனைத்து வட்டத் தலைநகரங்களிலும் ஒரு மணி நேர வெளிநடப்பு ஆர்ப்பாட்டம் மற்றும்பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்வது; அக்.1 முதல் 8 ஆம் தேதி வரைவிதிப்படி வேலை செய்யும் இயக்கம் நடத்துவது; அக். 9 ஆம் தேதியன்று தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.