ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்க பேரவை
2 Sept 2026, 10:38 pm

ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்க பேரவை

தருமபுரி, செப்.2-சிஐடியு ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்க பேரவை கூட்டத்தில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை தொழிலாளர் சங்கத்தின், சார்பில் தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி தேர்வுநிலை பேரூராட்சியின் தூய்மைப் பணியாளர்களின் பேரவைக் கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து, மாவட்டச் செயலாளர் ஏ.சேகர் சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்ட இணைச்செயலாளர்கள் ஏ.முருகேசன், சண்முகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இக்கூட்டத்தில், தூய்மைப் பணியை தனியாருக்கு கொடுக்கக்கூடாது.

5 வருட பணி முடித்த அனைத்து தூய்மைப் பணியாளர்களையும் நிரந்தரப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக அரசாணை 2டி, 62 இன்படி ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் கிராம ஊராட்சியின் தூய்மைப் பணியாளர்களின் 2 ஆவது மாநில மாநாட்டில் அதிகபடியான ஊழியர்கள் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, நடைபெற்ற சங்கத்தின் பிக்கிலி ஊராட்சி பேரவைக் கூட்டத்தில், சங்கத்தின் தலைவராக ராமசுந்தரி, செயலாளராக சங்கீதா, பொருளாளராக பழனியம்மாள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.