முந்தய பக்கம்

ஊரக வளர்ச்சித்துறையினர் தேனியில் ஆர்ப்பாட்டம் 9 மையங்களில் நடைபெற்றது

15 Jul 2026, 9:19 pm
ஊரக வளர்ச்சித்துறையினர் தேனியில் ஆர்ப்பாட்டம்  9 மையங்களில் நடைபெற்றது
<p><strong>ஊரக வளர்ச்சித்துறையினர் தேனியில் ஆர்ப்பாட்டம் 9 மையங்களில் நடைபெற்றது</strong></p><p>தேனி, ஜூலை 15- கூடுதல் இயக்குநர், இணை இயக்குநர், உதவி இயக்கு நர் காலிப்பணியிடங்கள் மற்றும் பதவி உயர்வை விரைந்து வழங்கக் கோரி வட்டார ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் தேனி மாவட்டத்தில் 9 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் பா.ஜெக தீசன், தேனி வட்டாரத்தில் மாவட்ட துணைத் தலைவர் வீ. துவாஸ், ஆண்டிபட்டியில் மாவட்ட துணைத் தலைவர் சக்தி திருமுருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கம்பம் வட்டாரத்தில் மாவட்ட தணிக்கையாளர் அசோக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் கிளை தலைவர் தயாளன், போடி வட்டாரத்தில் மாவட்ட இணைச் செயலாளர் வாணிப்ரியா, சின்னமனூர் வட்டாரத்தில் கிளை பொருளாளர் தங்கதுரை ஆகியோர் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடும்பாறை வட்டா ரத்தில் கிளைச் செயலாளர் முத்து, உத்தமபாளையம் வட்டாரத்தில் கிளைத் தலைவர் மணிகண்டன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தனர். ஆர்ப்பாட்டத் தில் ஏராளமான ஊரக வளர்ச்சித் துறையினர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram