முந்தய பக்கம்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

6 Aug 2026, 12:31 am
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ஊழியர்களின் 21 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் மற்றும் 6 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் மற்றும் இதர பணியிடங்களை உடனடியாக நிரப்புதல், கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் இணைத்தல் மற்றும் அரசு ஊழியர்களுக்கு இணையான உரிமைகளை வழங்குதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடத்தப்பட்டது. மாவட்டத் தலைவர் வெங்கடேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாவட்டச் செயலாளர் சுந்தர், பொருளாளர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

Share
FacebookXWhatsAppTelegram