தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் போராட்டம்

10 Oct 2026, 12:14 am
காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் போராட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் போராட்டம்

சென்னை, அக். 9-1,500 ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி வெள்ளியன்று (அக்.9) சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

துறையில் காலியாக உள்ள ஊராட்சி செயலர், ஓட்டுநர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலர்களை அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வேண்டும். 7 ஆண்டுகள் பணி முடித்த பணி மேற்பார்வையாளர்களுக்கு இளநிலை பொறியாளர் அல்லது உதவி பொறியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநிலத் தலைவர் சீ.காந்திமதிநாதன், “ஊரக வளர்ச்சித் துறையில் ஐஏஎஸ் அதிகாரிக்கு பதிலாக இந்திய வனப்பணி அலுவலரும், மகளிர் திட்ட இயக்குநர் பதவியை வங்கி அலுவலரை கொண்டுநியமனம் செய்துள்ளனர். 400 வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பாமல், நேரடிநியமனம் செய்ய உள்ளனர். இவற்றை முழுவதுமாக கைவிட வேண்டும். 9 ஊராட்சி ஒன்றியங்கள் புதிதாக பிரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. அவற்றிற்கான பணியிடங்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது” என்றார்.போராட்டத்தில் பொதுச் செயலாளர் க.பிரபு, பொருளாளர் மா.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர்பேசினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.