தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

11 Feb 2026, 5:52 pm
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
<p><strong>ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் 2வது நாளாக வேலை நிறுத்தம் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்</strong></p> <p>திருவண்ணாமலை, பிப்.11- 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் 10000 &nbsp;மேற்பட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் &nbsp;புதன்கிழமை (பிப்.11) &nbsp;இரண்டாவது நாளக வேலைநிறுத்தம் மேற்கொண்டனர். &nbsp;300 க்கும் மேற்பட்ட அலுவ லகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர் க.பிரபு பேசுகையில், வளர்ச்சித்துறையில் உள்ள காலியாக 1500 க்கும் மேற்பட்ட ஊராட்சி நிரப்பிட செயலர்கள் பணியிடங்கள் உள்ளிட்ட காலிப்பணியிடங்களை வேண்டும், ஊராட்சி செயலர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட அனைத்து உரிமை களையும் வழங்க வேண்டும், ஏழு ஆண்டுகள் பணிமுடித்துள்ள பணி மேற்பார்வையாளர்கள் அனை வரையும் இளநிலை பொறியாளர் நிலைக்கு தரம் உயர்த்த வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட கணினி உதவி யாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், தூய்மை பாரத இயக்க கணிணி உதவியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் கலைஞரின் கனவு இல்லம் உள்ளிட்ட வீடுகள் கட்டும் திட்டத்திற்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடம் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வ ராயன்மலை ஊராட்சி ஒன்றி யங்களிற்கு அனுமதிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி பணியிடத்தை அனுமதிக்க வேண்டும். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம், தருமபுரி மாவட்டம் பென்னாகரம், ஏரியூர், மொரப்பூர், கடத்தூர் ஆகிய வட்டாரங்களில் விடுபட்ட மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடங்களை ஏற்படுத்தவேண்டும் &nbsp;உள்ளிட்ட 18 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டதாக அவர் கூறினார். புதன்கிழமை (பிப்.11) &nbsp;மாநிலம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வளர்ச்சித்துறை அலுவலர்கள் பெருந்திரளாக பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் தலையீடு செய்து கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்று சங்கத்தின் நிர்வாகிகள் வலி யுறுத்தியுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.