முந்தய பக்கம்

ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி முகாம்

17 Feb 2026, 3:36 pm
ஊரக வேளாண் பணி  அனுபவ பயிற்சி முகாம்
<p><strong>ஊரக வேளாண் பணி &nbsp;அனுபவ பயிற்சி முகாம்ஊரக வேளாண் பணி &nbsp;அனுபவ பயிற்சி முகாம்</strong></p> <p>மயிலாடுதுறை, பிப்.17- &nbsp;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம், பரசலூர் ஊராட்சி மன்ற &nbsp;அலுவலக வளாகத்தில், காரைக்கால் மாவட்டம் பண்டித ஜவகர்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி முகாம் நடைபெற்றது. &nbsp;இம்முகாமில் தஞ்சாவூர் ஈச்சங்கோட்டை டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன், வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் பங்கேற்றனர். நவீன ரக நெல் தற்போது பரிந்துரைக்கப்படுகின்ற நிலையில், பாரம்பரிய நெல் ரகங்களின் மகத்துவம் குறித்தும் அதன் பயன்களை விவசாயிகளுக்கு விளக்கும் வகையில் மாணவர்கள் நடத்திய முகாமில் கருப்புகவுனி, நாட்டுபாசுமதி, நாட்டு வெள்ளை பொன்னி, குள்ளக்கார், சிவன்சம்பா, ரத்தசாலி, கிச்சிலிசம்பா, சிவப்புகவுனி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நெல் ரகங்களையும், விதைகளையும், காட்சிப்படுத்தியிருந்தது விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றது. &nbsp;இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழர் வேளாண்மை, தமிழர் மருத்துவம் இயற்கை விவசாயி ஞானப்பிரகாசம் வறண்ட பூமியில் வரப்பை உயர்த்தி மேககூட்டங்களை உருவாக்கி நெல்லை விளைவிக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார். இதில் இயற்கை விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram