ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்
10 Feb 2026, 4:50 pm
<p><strong>ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்</strong></p>
<p>தருமபுரி, பிப்.10- 18 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் கால வரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தை துவங்கியுள்ளனர். 25க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை கொண்ட ஒன்றியங்களை இரண்டாக பிரிக்க வேண்டும். உள்ளாட்சி தேர் தல் பணிகளுக்கு மாநில அளவில் மற்றும் மாவட்ட அளவில் நிரந்தர ஊழியர் கட்டமைப்புடன் ஏற்படுத்த வேண்டும். வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலா ளர்களை தமிழ்நாடு உறுதியளிக்கப் பட்ட ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட 18 அம்ச கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங் கத்தினர் செவ்வாயன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தை துவங்கியுள்ளனர். அதன்ஒருபகுதியாக, தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங் கத்தின் மாவட்டத் தலைவர் முகமது இலியாஸ் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் ச.இளங் குமரன், மாவட்ட நிர்வாகி பா.சங்கர், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலை வர் எம்.சுருளிநான் ஆகியோர் கோரிக் கைகளை விளக்கிப் பேசினர். அரூ ரில் வட்டத் தலைவர் வீரமணி, கடத் தூரில் மாவட்ட நிர்வாகி கிருஷ்ண மூர்த்தி, மொரப்பூரில் மாவட்டச் செய லாளர் வெ.தர்மன் ஆகியோர் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இதில் மாநில செயற்குழு உறுப் பினர் பிரின்ஸ், வட்டச் செயலாளர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தால், தருமபுரி மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களும் பூட்டப் பட்டன.</p>
<p> </p>
