முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

22 May 2026, 8:36 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

அரசியல் செயல்பாட்டாளர் யோகேந்திர யாதவ்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்பது தற்காலிகமான ஆத்திரம் அல்ல. நிறுவனங்கள் தங்களின் கதவுகளை மூடிக்கொள்ளும் போதும், ஜனநாயகம் வழங்கும் கருத்துச் சுதந்திரத்தை எஞ்சியிருக்க விடாமல் அதிகாரம் நெரிக்கும் போதும் ஏற்படும் ஆழமான கொந்தளிப்பையும், மூச்சுத்திணறலையும் தான் இது பிரதிபலிக்கிறது.

அமெரிக்கன் பல்கலைக்கழக பேராசிரியர் மாலினி ரங்கநாதன்

ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 100 ரூபாயை எட்டியிருப்பது வெறும் ஒரு தலைப்புச் செய்தி மட்டுமே. ஆனால், இதன் பின்னணியில் உள்ள கசப்பான உண்மை என்னவென்றால், கடந்த 15 ஆண்டுகளில் ரூபாய் தனது மதிப்பில் பாதியை இழந்துள்ளது. மக்கள் சேமிப்பு, ஓய்வூதியப் பாதுகாப்பு, வாங்கும் திறன் ஆகியவற்றில் பாதியை இழந்து தவிக்கின்றனர்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷாமா முகமது

ஒரு ஜனநாயகத்தில் பொறுப்புத் தன்மை மிக முக்கியமானது. மாணவர்களின் நம்பிக்கையைச் சிதைத்து, இளம் உயிர்களையும் பலிவாங்கிய நீட் வினாத் தாள் கசிவுப் பேரிடருக்கு ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பு என்ற வார்த்தைக்கு இன்னமும் ஏதேனும் அர்த்தம் தேடிக்கொண்டிருக்கிறார். அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.

ஆர்ஜேடி செய்தித் தொடர்பாளர் கஞ்சனா யாதவ்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் 22 லட்சம் இளம் இந்தியர்களின் எதிர்காலத்தைப் பணையத்தில் வைத்துள்ளது. ஆனால் நமது பிரதமரோ வெளிநாடுகளில் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதில் பிஸியாக இருக்கிறார். தேசிய தேர்வு முகமையானது ஒரு தேர்வு நடத்தும் அமைப்பைப் போல் இல்லாமல், நம்பிக்கையை இழந்த ஒரு முகமையைப் போலவே காட்சியளிக்கத் தொடங்கியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram