தீக்கதிர் முக்கிய செய்திகள்
13 Nov 2025, 3:30 pm

ஆர்டிஇ 25% இடஒதுக்கீடு விவரம் தர கெடு நீட்டிப்பு

சென்னை, நவ. 13 - ஆர்டிஇ சட்டத்தில் 25 சதவிகித இடஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்களை சமர்ப்பிக்க தனியார் பள்ளிகள் சங்கம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நவம்பர் 30 வரை அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 25 சதவீத ஒதுக்கீடு சேர்க்கைக்கான இணையதளத்தை திறக்காததால் அனைத்து இடங்களையும் பள்ளிகளே நிரப்பிவிட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி மீது செருப்பு வீச்சு: கருக்கா வினோத் கைது!

சென்னை, நவ. 13 - 2023-இல் சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசிய வழக்கில் கருக்கா வினோத் கைது செய்யப்பட்டார். என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதித்து திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. இந்நிலையில், தி.நகர் டாஸ்மாக் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் வியாழனன்று 6-ஆவது கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, சிறைத் தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நீதிபதி மீது காலணி வீச முயன்றார். சுதாரித்துக் கொண்ட காவல்துறை யினர் அவரை தடுத்து சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம்: தமிழக அரசு விளக்கம்!

சென்னை, நவ. 13 - ஆணாக இருந்தால் மட்டும் போதும், ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தில் மாதந்தோறும் ரூ. 1,000 தமிழக அரசு வழங்குகிறது என்று குறிப்பிட்டு, அதற்காக ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், “தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 1,000 பெறுவதற்கு சில தகுதிகள் உள்ளன. அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்திருக்க வேண்டும். அந்த மாணவர்கள் இளங்கலை பட்டப்படிப்பு, டிப்ளமோ மற்றும் ஐ.டி.ஐ. படிப்புகளை தடையின்றி முடிக்கும் வரை மட்டும் தமிழ்நாடு அரசு ரூ.1,000 நிதியை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும். ஆணாக பிறந்த அனைவருக்கும் நிதி வழங்கப்படும் என்பது தவறான தகவல் என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அரசு எச்சரித்துள்ளது.

ரஜினி படத்திலிருந்து சுந்தர். சி விலகல்!

சென்னை, நவ. 13 - கமல் ஹாசன் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவிருந்த படத்தை இயக்குவதில் இருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர். சி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தனிப்பட்ட காரணங் களுக்காக ரஜினியின் 173-ஆவது படத்திலிருந்து விலகு வதாகவும், இப்பெருமைமிகு படைப்பிலிருந்து விலகும் கடினமான முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.