தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் - ஊழல் பேர்வழி சந்தீப் மிட்டல் நியமனம் ரத்து

12 Apr 2026, 5:30 am
ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் - ஊழல் பேர்வழி சந்தீப் மிட்டல் நியமனம் ரத்து
<p><strong>ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் - ஊழல் பேர்வழி சந்தீப் மிட்டல் நியமனம் ரத்து</strong></p><p>சென்னை, ஏப். 11 - தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்ச மான நடவடிக்கைகள் மீது கடும் கண்ட னங்கள் எழுந்த நிலையில், சந்தீப் மிட்டல் நியமனத்தை இந்திய தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது. தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பதவியில் டேவிட்சன் தேவாசீர்வாதமே மீண்டும் தொடர்வார் என்றும், சந்தீப் மிட்டல் இனி ஆயுதப்படை போலீஸ் டிஜிபியாக மட்டுமே தொடர்வார் என தேர்தல் ஆணை யம் அறிவித்துள்ளது. அதிகாரம் வரம்பை மீறிய தேர்தல் ஆணையம்! தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் கண் காணிப்பு துறை (DVAC) டிஜிபியாக, டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியாற்றி வந்த நிலையில், திடீரென அவரை மாற்றிய இந்திய தேர்தல் ஆணையம், அந்த இடத்திற்கு சந்தீப் மிட்டலை நியமித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை (DAVC)-இன் தலைமை இயக்குநர் (டிஜிபி) பத விக்கும், தேர்தல் நடத்தும் பணிக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லாத போது, தேர்தல் ஆணை யத்தின் நடவடிக்கையானது, அதன் அதிகார வரம்புகளை தாண்டியது என்று கண்டனங்கள் எழுந்தன. முக்கிய அதிகாரிகளை மாற்றி அராஜகம்! தமிழக காவல்துறை டிஜிபி துவங்கி, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வரை பல்வேறு முக்கிய அதிகாரிகளை தேர்தல் ஆணையம் மாற்றிய நிலையில், இதுகுறித்து, பிரதான அரசியல் கட்சியான திமுக சார்பில் அதன் பொருளாளரும், நாடாளுமன்ற மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர். பாலு, தேர்தல் ஆணையத்திற்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதினார். அதில், தலைமைச் செயலாளர் முருகா னந்தம் குறித்து எந்தவொரு முக்கிய அரசியல் கட்சியும் எந்தவிதப் புகாரும் அளிக்கவில்லை. அவர் அந்தப் பதவியிலிருந்து இடமாற்றம் செய்யப்படுவதற்கு எந்தவிதமான தர்க்கரீதி யான அல்லது நியாயமான காரணங்களும் இல்லை. அவ்வாறிருக்கையில், அனுபவம் வாய்ந்த தலைமைச் செயலாளர் என். முருகானந்தத்தை மாற்றிவிட்டு சாய் குமாரை நியமித்திருக்கும் தேர்தல் ஆணையத்தின் தன்னிச்சையான முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்த டி.ஆர். பாலு, தேர்தல் காலத்தில் நிர்வாகம் தடை யின்றி நடக்க என். முருகானந்தமே தலைமைச் செயலாளராக தொடர வேண்டும் என வலி யுறுத்தினார். லஞ்ச - ஊழல் பேர்வழி லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியா? டிவிஏசி பிரிவின் டிஜிபியாக டாக்டர் சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டிருப்பதையும் திமுக கடுமையாக எதிர்ப்பதாக கூறிய டி.ஆர். பாலு, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளின் வெளிப்படையான ஆதரவாளர் என்பதை யும், சமூக வலைதளங்களில் சிறுபான்மையின ருக்கு எதிராக வெறுப்புப் பேச்சுகளைப் பேசிய வர் என்பதையும் சுட்டிக்காட்டினார். மேலும், சந்தீப் மிட்டல் மீது ஊழல் புகார் கள் நிலுவையில் இருப்பதால், இத்தகைய ஒரு அதிகாரியை முக்கியமான விசாரணை அமைப் பின் தலைவராக நியமிப்பது நடுநிலையான தேர்தலுக்கு உகந்தது அல்ல என்று கூறினார். சந்தீப் மிட்டல் மீது 5 ஆண்டுகளுக்கு முன்பே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்தி ருந்த புகார்களையும் டி.ஆர். பாலு தமது கடிதத்தில் சுட்டிக்காட்டினார். அன்றே அம்பலப்படுத்தியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி! “2020-ஆம் ஆண்டில், டாக்டர் மிட்டல் சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவுகள், ‘அகில இந்தியப் பணிகள் (நடத்தை) விதிகள், 1968’-க்கு முரணாக அமைந்திருந்தன எனக் குறிப்பிட்டு; அவர் மீது நடவடிக்கை எடுக்கு மாறு கோரி, அப்போதைய தமிழ்நாடு முதல மைச்சருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதம் எழுதியிருந்தது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, டாக்டர் மிட்டல் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியை “நகர்ப்புற நக்சல்கள்” என்று வர்ணித்தார். அரசியல் சார்ந்த விவகாரங்கள் குறித்து அவர் வெளியிட்டிருந்த சில டுவீட்கள், ஆர்எஸ்எஸ்-இன் வலதுசாரி சித்தாந்தத்தின் மீதான அவரது விசுவாசத்தையும் ஆதரவை யும் வெளிப்படுத்துவதாக ‘The News Minute’ இணையதளமும் செய்தி வெளியிட்டிருந்தது. முறைகேடான நடத்தை கொண்ட ஆர்எஸ்எஸ் - பாஜக விசுவாசி! இதுபோன்று, டாக்டர் சந்தீப் மிட்டல் பொதுவெளியில் வெளியிட்டுள்ள கருத்துக்கள், அவர் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் தீவிர ஆதரவாளர் என்பதையும், முஸ்லிம்களுக்கும் இடதுசாரிச் சித்தாந்தத்திற்கும் எதிராக வெறு ப்புப் பேச்சுகளைப் பேசிய நீண்டகாலப் பின்ன ணியைக் கொண்டவர் என்பதையும் எங்கள் மனதில் எவ்வித ஐயமுமின்றி உறுதிப்படுத்து கின்றன”. சித்தாந்தச் சார்புகளைத் தவிர, மிட்டல் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன. டாக்டர் மிட்டல் நிர்வாகப் பிரிவு டிஐஜி-யாகப் (காவல்துறை துணைத் தலைவர்) பணியாற்றிய ‘தேசிய குற்றவியல் மற்றும் தடயவியல் அறிவியல் நிறுவனத்தில்’ (NICFS) பணிபுரிந்த சங்கல்ப் ஆனந்த் என்பவர், 2014-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில், தனது மனைவியுடன் இணைந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலைக் குறிப்பில், என்.ஐ.சி.எப்.எஸ். நிறுவனத்தில் நடைபெற்ற 250 கோடி ரூபாய் மதிப்பிலான கட்டுமான ஊழலுக்கு டாக்டர் மிட்டல், மற்றொரு ஐபிஎஸ் அதிகாரியான கமலேந்திர பிரசாத் (உத்தரப்பிரதேச பிரிவு) மற்றும் வேறு சிலரே காரணம் என்று அவர் குற்றம் சாட்டியி ருந்தார். டாக்டர் மிட்டல் மீது உத்தரப்பிரதேச அரசு முதல் தகவல் அறிக்கையையும் பதிவு செய்தது. ஏடிஜிபி பதவி கூடவழங்காத ஒன்றிய அரசு அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச் சாட்டுகளின் தீவிரத்தன்மை காரணமாகவே, நீண்ட காலமாக மத்தியப் பணிக்கு (Central Deputation) அனுப்பப்பட்டிருந்த போதிலும், ஒன்றிய அரசு அவரை ஏடிஜிபி பதவிக்குத் தேர்வு செய்து அங்கீகரிக்கவில்லை; ‘சிறந்த சேவைக்கான காவல்துறைப் பதக்கம்’ கடந்த 13 ஆண்டுகளாக டாக்டர் மிட்டலுக்கு வழங்கப் படவில்லை. எனவே, அவர் மீது கடுமையான ஊழல் மற்றும் முறைகேடான நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகளும் நிலுவையில் உள்ளன. இத்தகைய பின்னணியைக் கொண்ட ஒரு அதி காரியை டிவிஏசி-இன் (லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை) தலைவராக நிய மிப்பது, பொதுமக்களின் நலனுக்கு உகந்ததாக இருக்காது” என்று டி.ஆர். பாலு தெரிவித்தி ருந்தார். பாஜக-வின் முகவரான தேர்தல் ஆணையம்! “ஒரு நடுநிலையான மற்றும் பாரபட்சமற்ற அரசியலமைப்பு அமைப்பாகச் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் எனும் நிறுவ னம், பாஜகவின் தேர்தல் முகவராகச் செயல்படு வது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தேர்தல் ஆணையம் அரசியலமைப்புக்கும் இந்நாட்டின் சட்டங்களுக்கும் மேலானது என்று, ஆணை யத்தில் உள்ள எவருடைய மனதிலும் எவ்விதத் தவறான எண்ணமும் இருக்காது என்று நாங்கள் நம்புகிறோம். சட்ட நடவடிக்கைகளுக்குச் செல்லத் தயங்க மாட்டோம்! 8.4.2026 தேதியிட்ட தேர்தல் ஆணை யத்தின் உத்தரவை திரும்பப் பெறுமாறும்; தமிழ்நாட்டில் ஆயுதப்படைகள், கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவுகளின் தலைமை இயக்குநராகப் பணியாற்றும் டாக்டர் சந்தீப் மிட்டலை அந்தப் பதவியிலிருந்து நீக்கு மாறும், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் இருவர் ஆகிய மூவரை யும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இதற்கு நீங்கள் இணங்கத் தவறும்பட்சத்தில், சட்டத்தி ற்கு உட்பட்டுத் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள நாங்கள் நிர்பந்திக்கப்படுவோம்” என்றும் எச்சரித்திருந்தார். இந்தப் பின்னணியிலேயே, லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை டிஜிபி சந்தீப் மிட்டலின் நியமனத்தை, இந்திய தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது. தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பதவி யில், முன்பு அப்பதவியை வகித்து வந்த டேவிட்சன் தேவாசீர்வாதமே தொடர்வார் என்றும் அறிவித்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.