தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மூவர்ணக் கொடியையும் போராட்ட உரிமையையும் நிலைநாட்டுவோம்! - ச.வீரமணி

28 Oct 2026, 8:45 pm
மூவர்ணக் கொடியையும்  போராட்ட உரிமையையும் நிலைநாட்டுவோம்! -  ச.வீரமணி

மூவர்ணக் கொடியையும் போராட்ட உரிமையையும் நிலைநாட்டுவோம்!

வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாப்பதற்கான போராட்டம், இந்தியத் தேசத்தின் அடிப்படையான அம்சங்கள் தொடர்பான விவகாரங்கள் வரை விரிவடைந்துள்ளது. அதேசமயத்தில், இது அமைதியான முறையில் போராடுவதற்கும் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்குமானஉரிமையையும் தவிர்க்க முடியாமல் முன்னுக்குக் கொண்டு வந்துள்ளது. 1950ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நமது அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் மூலம்,இத்தகைய விவகாரங்கள் அப்போதே தீர்க்கப்பட்டுவிட்டதாக ஒரு காலத்தில் கருதப்பட்டது.

ஆனால், சுதந்திரப் போராட்டத்தின்போது எந்தவிதமான பங்களிப்பையும் செய்திடாத ஆர்எஸ்எஸ் இதனைஏற்கவில்லை என்பது தெள்ளத் தெளிவான ஒன்று. வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடைபெற்ற சுதந்திரப்போராட்டத்தில் எவ்விதமான பங்கையும் செலுத்தாத ஆர்எஸ்எஸ், இப்போது பாஜக-வின்கீழ் ஆட்சியில் உள்ள ஒன்றிய அரசாங்கம் மற்றும் பல்வேறு மாநில சட்டமன்றங்களின் செயல்பாடுகளையும் திரைமறைவிலிருந்துகொண்டு இயக்கிவரும் நிலையில், அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை அம்சங்களுக்கும் தனது எதிர்ப்பை வெளிப்படையாகவே முன்வைக்க முனைந்துள்ளது.

தேசியச் சின்னங்கள் மற்றும் கொடிக்கு எதிரான ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாறு

வி.டி. சாவர்க்கர் மற்றும் எம்.எஸ். கோல்வால்கர் ஆகியோரின் அப்போதைய கருத்துகள் மற்றும் கட்டுரைகளைத் தவிர, இந்த பார்வையை உறுதி செய்கிற மிகவும் நம்பகமான காலவரிசை ஆவணங்கள், ஆர்எஸ்எஸ்இயக்கத்தின் அதிகாரப்பூர்வ இதழான‘ஆர்கனைசர்’-இன் காப்பகங்களில் காணப்படுகின்றன. தேசிய மூவர்ணக் கொடியை ஆர்எஸ்எஸ் கடுமையாக எதிர்த்ததுடன், இந்து தேசம், இந்தி மொழிமற்றும் காவிக்கொடி ஆகியவற்றுக்கான கோரிக்கைகளை மிகவும் வலுவாக முன்வைத்தது. 1947ஆம் ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் வெளியான ‘ஆர்கனைசர்’ இதழ்கள், அந்தப் பார்வையின் துல்லியமான பரிமாணங்களை வெளிப்படுத்துகின்றன.

இந்தியா சுதந்திரத்தை நோக்கி நகர்ந்த 1947ஆம்ஆண்டின் கொந்தளிப்பான மாதங்களில், புதிய தேசியச் சின்னங்களை ஆர்எஸ்எஸ் எதிர்த்தது. இதுதேசத்தை இந்துத்துவக் கோட்பாடுகளின் அடிப்படையில் மறுவரையறை செய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது. அது முன்வைத்த தேசத்தின் பெயர், மொழி மற்றும் கொடிஆகியவை வெறும் அடையாளங்கள் சார்ந்த கேள்விகள் மட்டுமல்ல, அவை இந்துக்களுக்கும் சிறுபான்மையினருக்கும் இடையே பகைமையை உருவாக்கும் விதத்திலும் அமைந்திருந்தன. 1947 ஜூலை-ஆகஸ்ட் மாத ‘ஆர்கனைசர்’இதழ்கள், தங்கள் பார்வையை நிலைநாட்ட அந்தஅமைப்பு மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததையே காட்டுகின்றன.

1947 ஜூலையில், இந்திய அரசியல் நிர்ணய சபையில் தேசியக் கொடி குறித்த விவாதம் நடைபெற்றது. நாடு மூவர்ணக் கொடியை ஏற்கும் திசையில் சென்றபோது, ஆர்எஸ்எஸ் ஒரு கடுமையான பிரச்சாரத்தைத் தொடங்கியது. ‘பகவா த்வஜ்’ என்பது ஆர்எஸ்எஸ் போற்றும்காவிக்கொடியாகும். இது அவர்களின் கிளைஅமைப்புகளான ‘சாகாக்களில்’ ஏற்றப்படுகிறது. ஆர்எஸ்எஸ் உடன் தொடர்புடைய சில சந்நியாசிகளும் இந்தக் கொடியைத் தாங்கிச் செல்கின்றனர். ஜூலை 17 அன்று வெளியான ‘ஆர்கனைசர்’ தலையங்கம், தங்கள் கொடியின் மேன்மையை புகழ்ந்து தள்ளியது.“ஒரு கொடி தேசத்தைப் பிரதிபலிக்கிறது. இந்துஸ்தானத்தில் ஒரே ஒரு தேசம் மட்டுமே உள்ளது, அது இந்து தேசம். இது 5000ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்ட தேசம். எனவே, இந்தக் கொடி இந்தத் தேசத்தைமட்டுமே குறிக்க வேண்டும். அனைத்துச் சமூகத்தினரின் விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் வகையில்நாம் ஒரு கொடியைத் தேர்ந்தெடுக்க முடியாது” என்றுஅந்தத் தலையங்கம் கூறியது.

இந்த வாதம், இந்தியாவின் கடந்த காலம் குறித்த ஒரு போலியான பிம்பத்தை உருவாக்கியது. பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியிலிருந்துஇந்தியா சுதந்திரம் அடைவதற்கு முந்தைய 5000ஆண்டுகளில், பிற சமூகத்தினர் எவரும் இன்றி,இந்துக்கள் மட்டுமே கொண்ட ஒரு ‘இந்து தேசம்’ தடையின்றி நீடித்திருந்தது என்பதற்கு எந்தவிதமான வரலாற்று அல்லதுதொல்பொருள் ஆதாரமும் இல்லை. உண்மையில், இந்திய தேசம் என்பது இந்துக்களை மட்டுமே கொண்டதாக இருந்ததற்கான எந்தச் சான்றும் இல்லை. காலனி ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில்பன்முகத்தன்மையின் ஒற்றுமையால் வர்ணிக்கப்பட்ட இந்திய தேசியம் உருவானது. அது,வலிந்து இணைத்துக் கொள்வதைக் காட்டிலும் தன்மயமாக்கலின் மூலமே தனது இயல்பிலேயே ஒரு கலவையாக விளங்கியஒரு தேசமாக இருந்தது. ஆனால், ஆர்எஸ்எஸ் இவை அனைத்தையும் எதிர்த்தது.

விடுதலைப் போரின்போது ஆர்எஸ்எஸ் மேற்கொண்ட நிலைப்பாடு

மேலும் அந்தத் தலையங்கம் கீழ்க்கண்டவாறு ஒரு மிரட்டல் தொனியையும் வெளிப்படுத்தியது: “இந்தக்காவிக் கொடியில் உள்ள தனித்துவமான வசீகரத்தையும், மேன்மையையும், கம்பீரத்தையும் கண்டறியவோ அல்லது மதிக்கவோ முடியாதவர்கள், அறியாமையில்இருப்பவர்களாகவோ அல்லது தீய நோக்கம் கொண்டவர்களாகவோதான் இருக்க முடியும். இந்தக் கொடி மட்டுமே இந்துஸ்தானத்தின் உண்மையான தேசியக்கொடியாக இருக்க முடியும். இது மட்டுமே தேசத்தால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய ஒரே கொடியாகும். மக்களின் விருப்பத்தைநிறைவேற்றுவதே அரசியல் நிர்ணய சபைக்குச் சிறந்ததாக இருக்கும்.”ஆர்எஸ்எஸ் அமைப்பு இத்தகைய மாயையைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், மக்கள் அத்தகைய பார்வையைக் கொண்டிருக்கவில்லை. சுதந்திரப் போராட்டத்தில் தாங்கள் பெற்ற நேரடி அனுபவங்களின் காரணமாக மக்கள் ஒரு நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். ஏனெனில், அந்தப் போராட்டத்தின்போது, ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர்கள், மக்கள் சுதந்திரப் போராட்டத்தில் சேரக்கூடாது என்றுவெளிப்படையாகவே அறிவுறுத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் விசுவாசிகளாகவே செயல்பட்டு வந்தனர்.

எதிர்பார்த்தபடியே, அரசியல் நிர்ணய சபையின்தீர்மானத்தின் மூலம் மூவர்ணக் கொடி ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனினும் அதற்கு எதிராக சாவர்க்கர் எழுதினார். அவரது முழு அறிக்கையும் ‘ஆர்கனைசர்’ இதழின் 1947 ஆகஸ்ட் 7ஆம் தேதி பதிப்பில் வெளியிடப்பட்டது. அதேபோல், கோல்வால்கரும் இதேபோன்ற கருத்துகளைத் தெரிவித்தார். ‘மூன்று’ என்ற சொல்லே தீயது; மூன்று நிறங்களைக்கொண்ட கொடி மிகவும் மோசமான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று சுதந்திரத்திற்கு முந்தைய நாள்‘ஆர்கனைசர்’ எழுதியது. ஆர்எஸ்எஸ் தொடக்க காலத்திலிருந்தே மூடநம்பிக்கைகளில் மூழ்கியிருந்தது என்பதில்வியப்பொன்றும் இல்லை.

இன்று ஆர்எஸ்எஸ் அமைப்பும், பாஜக உட்படஅதன் துணை அமைப்புகளும் யார் தேசவிரோதி என்று சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தைத் தாங்களே எடுத்துக்கொண்டு, தேசியக் கொடியைப் பயன்படுத்தும் விஷயத்தில் மிகுந்த கபடத்தன்மையுடன் செயல்படுகின்றன. நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் சுமார் 52 ஆண்டுகளாகத் தேசியக்கொடி ஏற்றப்படவே இல்லை. அதேசமயம், 1992ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று ஸ்ரீநகரின் லால்சௌக்கில் மூவர்ணக் கொடியை ஏற்றுவதற்காகக் கன்னியாகுமரியிலிருந்து ஸ்ரீநகர் வரை பாஜக ‘ஏக்தா யாத்திரை’யைநடத்தியது. உண்மையில், காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் ஏற்கனவே மூவர்ணக்கொடியை ஏற்றித்தான் வந்தனர். எனவே, தேசியக் கொடியைப் பற்றி மிகவும் கடுமையான, அவதூறான கருத்துகளைக் கொண்டிருந்த போதிலும், தேசபக்தியையும் தேசியவாதத்தையும் வெளிப்படுத்த மூவர்ணக் கொடிஒரு வசதியான கருவியாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இன்றைய போராட்டங்களில் மூவர்ணக் கொடியின் எழுச்சி

சமீபகாலப் போராட்டங்களில், இந்தியக் குடியரசின் அரசமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கும், மோடி அரசாங்கத்தின் போக்கினால்அச்சுறுத்தலுக்கு உள்ளானதாக உணர்பவர்களுக்கும், தேசியக் கொடியான ‘மூவர்ணக் கொடி’ ஒரு கௌரவச் சின்னமாக மாறியிருப்பது மனதிற்கு ஊக்கமளிப்பதாக உள்ளது. மோடி அரசாங்கம், கார்ப்பரேட்டுகள் மற்றும் இந்துத்துவா சக்திகளின் கள்ளக் கூட்டணியை முன்னெடுத்துச் செல்வதுடன், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை விழுமியங்களைச் சிதைக்கும் வேலைகளிலுமஈடுபட்டுவருகிறது.

நாட்டின் விவசாயத்தை கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டிற்கு மாற்றுவதற்காகக் கொண்டுவரப்பட்ட மூன்று கருப்புச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய வீரஞ்செறிந்த இருபது மாத காலப்போராட்டம் நடைபெற்ற சமயத்தில், கார்ப்பரேட்டுகளுக்கும் இந்துத்துவவாதிகளின் ஆட்சிக்கும் இடையேயான கள்ளப்பிணைப்பிற்கு எதிர்ப்பைக்காட்டும்விதத்தில் மூவர்ணக்கொடி பெருமளவில் பயன்படுத்தப்பட்டது. மக்கள் தங்கள் பற்றுறுதியை வெளிப்படுத்த தேசியக் கொடியையும், அரசமைப்புச் சட்டத்தின்பிரதிகளையும், டாக்டர் அம்பேத்கரின் உருவப்படங்களையும் பயன்படுத்தினர்.

எனவே, தில்லி வீதிகளிலும், பிற இடங்களிலும் ‘ஜென் இசட்’ (Gen Z) தலைமுறையினர் முன்னெடுக்கும் போராட்டங்களிலும், வாக்குரிமையைப்பாதுகாப்பதற்கான பரந்த போராட்டங்களிலும் ‘மூவர்ணக்கொடி’ மீண்டும் முன்னிலைப்படுத்தப்படுவது வியப்பிற்குரிய ஒன்றல்ல. தேர்தல் ஆணையர்களை நியமிப்பதில் வெளிப்படைத்தன்மை மற்றும்பாரபட்சமற்ற தன்மையை வலியுறுத்தியும், ‘எஸ்ஐஆர்’(SIR) நடைமுறையை முடக்கியதற்கு எதிராகவும் போராடியவர்கள் மீது, சீருடை அணியாத ஆர்எஸ்எஸ் குண்டர்களும், சீருடை அணிந்த பல்வேறு பாதுகாப்புப் படையினரும் கட்டவிழ்த்துவிட்ட மனிதாபிமானமற்ற வன்முறை,போராட்டக்காரர்களை மீண்டும் ஒருமுறை ‘மூவர்ணக்கொடியை’ மிகவும் ஆக்கப்பூர்வமாகவும் உற்சாகத்துடனும் கையில் ஏந்தத் தூண்டியுள்ளது. பல்வேறு இளைஞர் அமைப்புகள் விடுத்த ‘மூவர்ணக் கொடியை உயர்த்திப்பிடிப்போம்’ என்ற அழைப்பானது, வாக்குரிமையையும் ஜனநாயகத்தையும் காப்பதற்கான போராட்டத்தில் உண்மையான தேசபக்தி உணர்வைத் தட்டி எழுப்பியுள்ளது.

மூவர்ணக் கொடியை உயர்த்திப்பிடிக்கும் இந்தச் செயல், போராடுவதற்கான உரிமை மற்றும் இந்திய அரசமைப்புச்சட்டத்தின் 19ஆவது பிரிவுடன் பிரிக்க முடியாத வகையில் பிணைக்கப்பட்டுள்ளது. அரசமைப்புச்சட்டத்தின் 19ஆவது பிரிவை மதிக்க வேண்டும் என்றுஉச்சநீதிமன்றம் வலியுறுத்தியிருந்த போதிலும், தில்லிகாவல்துறையும் அரசாங்கமும் தொடர்ந்து போராட்டங்களை முடக்கவும், போராட்ட ஒருங்கிணைப்பாளர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கவும் முனைப்புடன் செயல்படுகின்றன என்பது தெளிவாகிறது. மூவர்ணக் கொடியை மீண்டும் முன்னிறுத்துவதும், போராடுவதற்கானஉரிமையை நிலைநாட்ட முயல்வதும், இத்தகைய இருண்ட காலக்கட்டத்தில் நிகழ்ந்து வரும் மிகச் சிறந்த விஷயங்களாகும்.

‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ தலையங்கம், அக்டோபர் 25, 2026

தமிழில் சுருக்கம்: ச.வீரமணி

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.