1949 முதல் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது ஆர்எஸ்எஸ் கடும் தாக்குதல் நடத்துகிறது
26 Nov 2025, 3:40 pm
<p><strong>1949 முதல் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது ஆர்எஸ்எஸ் கடும் தாக்குதல் நடத்துகிறது</strong></p>
<p>இந்திய அரசியலமைப்புச் சட் டத்தை முறைப்படி ஏற்றுக் கொள்வதற்கான தீர்மானத்தை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையி லான குழு சமர்ப்பித்து 76 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 1949 இல் இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்கப்பட்ட நாளில் இருந்தே சட்டத் தின் மீதும், அம்பேத்கரது கொள்கைகள் மீதும் ஆர்எஸ்எஸ் கடுமையான தாக்கு தலைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இது குறித்து பேசியுள்ள காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்புப் பொறுப்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான ஆர்எஸ்எஸ் அமைப்பின் தாக்குதல்கள் இன்றும் தடையின்றித் தொடர்கின்றன. அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை யில் (Preamble) உள்ள சோசலிசம், மதச் சார்பின்மை ஆகிய வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று அவ்வமைப்பு தொட ர்ந்து வற்புறுத்தி வருவதையும் சுட்டிக் காட்டினார். ஆர்எஸ்எஸ்சின் இக்கோரிக்கையா னது அம்பேத்கரின் தலைமையில் உரு வாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முக்கியக் கொள்கைகளை அழிப்பதற்கான நீண்ட காலத் திட்டத்தின் ஒரு பகுதியே ஆகும். அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பை ஆர்எஸ்எஸ் ஒருபோதும் உண்மையாக ஏற்றுக் கொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>
