ஆர்எஸ்எஸ் - பாஜக குண்டர்கள் காவல்துறை உடையில் மாணவர்கள் மீது தாக்குதல்
21 Jul 2026, 8:51 pm

ஆர்எஸ்எஸ் - பாஜக குண்டர்கள் காவல்துறை உடையில் மாணவர்கள் மீது தாக்குதல்

புதுதில்லி நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராகவும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் ராஜினாமா செய்யக் கோரி சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் இருந்த போதே ஜூலை 20 அன்று, தில்லி சன்சத் மார்க் வழியாக பேரணியாக சென்று நாடாளுமன்றத்தை முற் றுகை போராட்டம் நடத்தப் போவ தாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்து இருந்தது. இந்த அறி விப்பின்படி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி உறுப்பினர்கள் மற்றும் இந்திய மாணவர் சங்க தலைவர்களின் முன் னிலையில் மாணவர்கள் திங்க ளன்று காலை நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

ஆனால் சன்சத் மார்க் காவல் நிலையம் அருகே பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட னர். கூட்டத்தைக் கட்டுப்படுத்துவ தாக கூறி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கட்டுப்பாட்டில் தில்லி காவல்துறை, துணை ராணு வப் படையின் 12 கம்பெனிகள், சிஐ எஸ்எப் வீரர்கள் அடங்கிய பாது காப்புப் படையினர் மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக் கான மாணவர்கள் படுகாயமடைந்த னர். சிறுமிகள், மாணவர்கள் என்று பாராமல் மோடி அரசு களமிறக்கிய பாதுகாப்புப் படை கண்மூடித்தன மாக தாக்குதல் நடத்தியது. குறிப் பாக, ஆர்எஸ்எஸ் - பாஜக குண்டர் களும் தில்லி காவல்துறை மற்றும் துணை ராணுவத்தினர் உடையில் தாக்குதல் நடத்தியது தற்போது அம் பலமாகியுள்ளது. இந்த கும்பல் தான் மாணவர்கள் மீது ‘தடியடி வரையறையின்றி’ கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது.

தலைக்காயம் அதிகம்

பொதுவாக லத்தி ஜார்ஜ் என் றால், காவல்துறையினர் கால்களில் மட்டுமே தாக்குதல் நடத்துவார்கள். ஆனால் தில்லியில் பாதுகாப்புப் படையினர் மாணவர்களின் தலையி லும், முகத்திலும், முதுகு என அனைத்து இடங்களிலும் தாக்கு தல் நடத்தியுள்ளனர். மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களில் பெரும்பாலான வர்கள் தலைக்காயத்துடன்தான் உள்ளார்கள் என செய்திகள் வெளி யாகியுள்ளன.

குண்டுவீச்சு

மாணவர்களை ஒடுக்க தில்லி காவல்துறை வெடிகுண்டையும் வீசி யது. இந்த குண்டுவீச்சில் பல மாண வர்கள் படுகாயமடைந்தனர். ஒரு மாணவர் போராட்டக்களத்திலேயே மயங்கி விழுந்தார். ஹரியானா வைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு கை, கண்ணில் பலத்த காயம் ஏற் பட்டுள்ளதாக செய்திகள் வெளி யாகியுள்ளன.

ஹிட்லரின் தனியார் படை

இதுதொடர்பாக ‘இந்தியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகி லேஷ் கூறுகையில், ”சுதந்திரத் திற்குப் பிறகு, ஒன்றிய அரசு பொது மக்களிடம் இவ்வளவு மோசமாக நடந்து கொள்ளும் என்று யாரும் கற்பனை செய்திருக்க முடியாது. ஹிட்லர் தனது சொந்தத் தனியார் படையை உருவாக்கியது போல, திங்களன்று சீருடை அணியாத பல நபர்கள் போராட்டக்காரர்களைத் தாக்குவதை நாங்கள் பார்த்தோம். பாஜக அரசு தன் அமைச்சர்களை ராஜினாமா செய்யச் சொல்லி அழுத்தம் கொடுக்க முடியாத நிலை யில் உள்ளது; ஏனெனில், அவ்வாறு அழுத்தம் கொடுத்தால் அவர்கள் அரசின் ரகசியங்களை வெளிச்சத் திற்கு கொண்டு வந்துவிடுவார்கள் என்று பாஜக அரசுக்கு தெரியும்” என அவர் கூறினார்.