அமெரிக்க நாடாளுமன்றத்தில் லாபி செய்யும் ஆர்எஸ்எஸ் ரகசிய திட்டம் அம்பலம்
14 Nov 2025, 1:26 pm
<p><strong>அமெரிக்க நாடாளுமன்றத்தில் லாபி செய்யும் ஆர்எஸ்எஸ் ரகசிய திட்டம் அம்பலம் பாகிஸ்தான் தொடர்புடைய நிறுவனத்திற்கு பல கோடி பணம்</strong></p>
<p>புதுதில்லி அமெரிக்க நாடாளுமன்றத்தில் அரசியல் செல்வாக்கை உருவாக்கி கொடுக்க ஸ்கொயர் பேட்டன் போக்ஸ் என்ற பெரிய லாபி நிறுவனத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பு பல கோடி ரூபாய் கொடுத்து பணிக்கு அமர்த்தியுள்ளது. இந்த நடவடிக்கை இந்தியாவில் ஒரு மிகப் பெரிய அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ‘ப்ரிஸம்’ என்ற செய்தி நிறுவனம் நடத்திய புலனாய்வு விசாரணையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்த திருட்டுத்தனம் வெளிவந்துள்ளது. ஆர்எஸ்எஸ் தனக்கு உலகளவில் குறிப்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் செல்வாக்கு இருப்பது போன்ற பிம்பத்தை உயர்த்திக் காட்டுவதற்காக அதிக பணம் முதலீடு செய்து இந்த பிரச்சாரத்தை 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் துவங்கியது என அந்த புலனாய்வின் மூலமாகத் தெரியவந்துள்ளது. அதாவது ஆர்எஸ்எஸ்-இன் நலன்களை கருத்தில் கொண்டு, அதற்கு ஆதரவாக அமெரிக்க நாடாளுமன்றமான செனட் மற்றும் அமெரிக்க எம்.பி,க்களிடம் பேசி அவர்களின் மூலமாக ஆர்எஸ்எஸ் அமைப்பு தனக்கு அதிக செல்வாக்கு இருப்பது போலக் காட்டி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தனக்கு தேவையானவற்றை சாதித்துக்கொள்ள இந்த வேலைகளை செய்துள்ளது. இதற்காகவே ஸ்கொயர் பேட்டன் போக்ஸ் என்ற நிறுவனத்திற்கு 2025-ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் மட்டும் சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ( 2 கோடியே 92 லட்சம் ரூபாய்க்கும் மேல் ) ஆர்எஸ்எஸ் கொடுத்துள்ளது. பாகிஸ்தானுடன் தொடர்புடைய நிறுவனம் இந்த ஸ்கொயர் பேட்டன் போக்ஸ் நிறுவனம் பாகிஸ்தானுக்காகவும் அமெரிக்காவில் லாபி செய்யும் வேலைகளை செய்து வரு கிறது. சமீபத்தில் டிரம்ப் வர்த்தகப் போரை துவங்கிய போது பாகிஸ்தான் மீது 29 சதவீத வரி விதித்தார். பிறகு இந்த நிறுவனத்தின் மூல மாக பாகிஸ்தான் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரிடம் பல கோடி ரூபாய் பணம் செலவு செய்து லாபி செய்த பிறகே டிரம்ப் பாகிஸ்தானுக்குச் சாதகமாக வரியை 29 இல் இருந்து 19 சதவிகிதமாக குறைத்தார் என கூறப்பட்டுள்ளது. அதே கால கட்டத்தில், அமெரிக்கா இந்தியப் பொருட் களுக்கான வரியை 50 சதவிகிதமாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. ஒருபுறம் பாகிஸ்தானை இந்தியாவின் எதிரி யாகவும், இஸ்லாமியர்களை இந்துக்களின் எதிரியாகவும் காட்டி மதவெறிப்பிரச்சாரம் செய்யும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் இந்துத்துவா மதவெறியை தேசியவாதமாக முன்வைத்து வருகிறது. மேலும் அவர்கள் மட்டுமே தேசியவாதிகள் எனவும் அரசியல் அமைப்புச் சட்டத்தையும் உரிமைகளையும் பாது காக்க நினைப்பவர்களை தேச விரோதிகள் எனவும் கட்டமைக்க முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானுடன் தொடர்புடைய நிறுவனத்துக்கு ஆர்எஸ்எஸ் அமைப்புச் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து அவர்களுடன் தொடர்பை உரு வாக்கியுள்ளது பெரும் விவாதத்தையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது. உலகளாவிய இலக்குகள் ஆர்எஸ்எஸ் உருவாகி நூற்றாண்டு நிறைவை (2025) நோக்கி நகரும் நிலையில், தனது இந்துத்துவா மதவெறி கலவர நட வடிக்கைகளை மறைத்து உலகளவில் பெரும் செல்வாக்கைப் பெற்ற அமைப்பாக தன்னை காட்டிக்கொள்ளவே இந்த லாபி நடவடிக்கை முயற்சியை அவர்கள் முன்னெடுப்பதாகப் பார்க்கப்படுகிறது. உலகளவில் தனது தொடர்புகளை பல உயர் மட்டத் தலைவர்களுடன் ஏற்படுத்திக் கொள்வதே ஆர்எஸ்எஸ் லாபி நடவடிக்கை யின் நோக்கம் என்று பத்திரிகையாளர் தினேஷ் நாராயணன் விமர்சித்துள்ளார். இது ஆர்எஸ் எஸ்-இன் வழக்கமான செயல்பாட்டிற்கு மாறானது என்றும், உலக அரங்கில் தனது செல்வாக்கை விரைவாக விரிவுபடுத்த அது முயற்சி செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டி யுள்ளார். மேலும் அவ்வமைப்பு தன்னை ‘விஸ்வகுரு’ நிலைக்கு மாற்றிக் (காட்டிக்) கொள்ள தொடர்ந்து வேலை பார்க்கிறது. அதற்காகவே அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ள முக்கிய நபர்களுடன் தொடர்பு கொள்ள லாபி நிறுவனத்திற்கு பணம் கொடுத்துள்ளது. அந்த ‘விஸ்வகுரு’ இலக்கை அடையும் தனது முயற்சியை ஆர்எஸ்எஸ் கைவிடத் தயாராக இல்லை என்பதைத்தான் இந்த நடவடிக்கை காட்டுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து ஆர்எஸ்எஸ் அமைப்போ அல்லது ஸ்கொயர் பேட்டன் போக்ஸ் நிறுவனமோ எந்தக் கருத்தும் தெரி விக்கவில்லை.</p>
<p> </p>
