தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளிம்பிலிருந்து மையத்திற்கு  ஆர்.எஸ்.எஸ்- இன் நூற்றாண்டு காலப்பயணம் - ஓர் ஆய்வு

15 Mar 2026, 4:11 pm
விளிம்பிலிருந்து மையத்திற்கு  ஆர்.எஸ்.எஸ்- இன் நூற்றாண்டு காலப்பயணம் - ஓர் ஆய்வு
<p><strong>விளிம்பிலிருந்து மையத்திற்கு &nbsp;ஆர்.எஸ்.எஸ்- இன் நூற்றாண்டு காலப்பயணம் - ஓர் ஆய்வு</strong></p> <p>ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை யொட்டி &lsquo;பிரண்ட்லைன்&rsquo; (Frontline) இதழ் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைகளின் தமி ழாக்கமே பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள &lsquo;விளிம்பி லிருந்து மையத்திற்கு&rsquo; என்னும் இந்நூல். ச. லெனின் தொகுத்துள்ள இப்புத்தகம், ஆர்.எஸ்.எஸ்-இன் கருத்தியல் ஊடுருவல்களையும், அதன் &nbsp;தந்திரங்களையும் ஆதாரப்பூர்வமாகத்தோலுரிக்கிறது. மனுவாதக் கோட்பாடும் மறைமுகத் தந்திரங்களும் பெண்கள், சிறுபான்மையினர், ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் கம்யூனிஸ்டுகளைத் தனது மனுவாதக் கோட்பாட்டின்படி அந்நியப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ், தனது பிரிவினைவாதத் திட்டங்களை &lsquo;ஒற்றுமை&rsquo; மற்றும் &lsquo;முன்னேற்றம்&rsquo; என்ற போர்வையில் மறைத்தே செயல்படுகிறது. அதன் செயல்பாட்டு முறைகளையும், தந்திரங்களையும் விரிவாகப் பகுப்பாய்வு செய்கிறது இந்நூல். மாமேதை லெனின் காட்டிய வழியில், சமுதாயத்தின் மாற்றத்திற்கான சக்திகளைக் கண்டறிந்து அவர்களுக்கு அறிவொளி ஊட்ட &nbsp;வேண்டி யதன் அவசியத்தை ஆசிரியர் வலியுறுத்துகிறார். அரசியல் கருவியாகும் பக்தி இந்து மதத்தின் வேர்களில் உள்ள கடவுள்களையும் பக்தியையும், அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்று வதற்கான உணர்ச்சிகரமான கருவிகளாக ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்துவதை இக்கட்டுரைகள் விளக்கு கின்றன. &lsquo;கலாச்சாரப் பெருமை&rsquo;, &lsquo;பெரும்பான்மை வாதம்&rsquo; என்ற இரட்டை முகமூடிகளை அணிந்து கொண்டு &lsquo;இந்துத்துவ ராஷ்ட்ராவை&rsquo; உருவாக்க அது மேற்கொள்ளும் ஊடுருவல்களை இந்நூல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. எச்சரிக்கையும் எதிர்வினையும் ஆர்.எஸ்.எஸ் புறக்கணிக்கப்பட்ட காலத்தில் இருந்ததை விட, இன்று அதிக அதிகாரத்தோடு இருக்கும் சூழலில் நாம் இரட்டிப்பு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை இந்நூல் உணர்த்துகிறது. தில்லியில் அதன் புதிய அலுவலகம் திறக்கப்பட்ட தன் பின்னணியில் உள்ள அதிகார மையச் செயல்பாடுகளையும் மோகன் பகவத்தின் உரைகளை யும் நூல் சுட்டிக்காட்டுகிறது. தேசம் குறித்த வரையறை, காந்தி படுகொலை, சாதி அமைப்பு முறை மற்றும் சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்-இன் பங்கு எனப் பல்வேறு தளங்களில் அதன் கருத்தியலைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் புரிந்துகொள்ள ஆறு கட்டுரைகள் கொண்ட இத்தொகுப்பு ஒரு சிறந்த கையேடு. விளிம்பிலிருந்து மையத்திற்கு &nbsp;(நூற்றாண்டு கால &nbsp;ஆர்.எஸ்.எஸ் - உள்ளும் புறமும்) தொகுப்பு: ச. லெனின் வெளியீடு: பாரதி புத்தகாலயம் &nbsp;பக்கங்கள்: 80 | விலை: ₹80</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.