மழையால் வீடு இடிந்து உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்
11 Nov 2025, 6:02 pm
<p><strong>மழையால் வீடு இடிந்து உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம்</strong></p>
<p>தஞ்சாவூர், நவ.11- தஞ்சாவூரில், மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் திங்கட்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 501 மனுக்களை, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் வீ. வெண்ணிலா என்பவருக்கு, கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினையும், கும்பகோணம் வட்டம், சுந்தரபெருமாள் கோவில் ஆற்றங்கரைத் தெருவில் வசித்து வந்த மணிமேகலை என்பவர், மழையின்போது வீடு இடிந்து விழுந்து இறந்ததால் அவரது வாரிசுதார்களுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சத்திற்கான காசோலையினையும் வழங்கினார். இக்கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்டம் தனித்துணை ஆட்சியர் சௌமியா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் எம்.செல்வம் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>
