திண்டுக்கல்லில் ரூ. 34 லட்சம் நிதியளிப்பு
24 Jan 2026, 3:38 pm
<p><strong>திண்டுக்கல்லில் ரூ. 34 லட்சம் நிதியளிப்பு</strong></p>
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி நிதிக்கு, திண்டுக்கல் மாவட்டத்தில் வீடு, வீடாகச் சென்று மக்களிடம் நிதி சேகரிக்கப்பட்டது. இதில் திரட்டப்பட்ட நிதி ரூ. 34 லட்சம், கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்திடம் அளிக்கப்பட்டது. வி.பி. சிந்தன் நினைவரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், மாவட்டச் செயலாளர் கே. பிரபாகரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி. செல்வராஜ், கே. அருள்செல்வன், பி. வசந்தாமணி, பி. ஆஸாத், எஸ். கமலக்கண்ணன், எம். ராமசாமி, டி. முத்துச்சாமி, தா. அஜாய்கோஷ், கே.ஆர். பாலாஜி மற்றும் தாலுகா, ஒன்றிய - இடைக்கமிட்டிச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.</p>
