பறக்கும் படை வாகன தணிக்கையில் ரூ. 3 லட்சத்து 40 ஆயிரம் பறிமுதல்
17 Mar 2026, 3:26 pm
<p><strong>பறக்கும் படை வாகன தணிக்கையில் ரூ. 3 லட்சத்து 40 ஆயிரம் பறிமுதல்</strong></p>
<p>சிதம்பரம், மார்ச் 17- சிதம்பரம்-காட்டு மன்னார்கோயில் புற வழிச்சாலையில் சிதம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது தேர்தல் விதிக்கு புறம்பாக தனிநபர் வைத்திருந்த ரூ.3,40 லட்சம் இருந்தது. இந்த பனம் குறித்த ஆவணம் இல்லை. மேலும் இது குறித்த விசாரணையில் திருச்சி மாவட்டம் முசிறி பகுதியைச் சேர்ந்த ரப்பர் நிறுவனம் நடத்தி வரும் கிருஷ்ணராஜ் என்பது தெரிய வந்தது. பின்னர் அவரிடமிருந்து தேர்தல் உதவி வணிக அலுவலர் ஆனந்தி தலை மையிலான பறக்கும் படை குழுவினர் கைப்பற்றி பணத்தை பறி முதல் செய்து சிதம்பரம் சட்ட மன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலு வலர் ஹரிதாஸ் யிடம் ஒப்படைக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நபர் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.</p>
