திருச்சி விரைவு செய்திகள்
24 Mar 2026, 3:23 pm

இராஜபாளையம் ரயில் நிலையத்தில் பயணியிடம் ரூ.1.46 லட்சம் பறிமுதல்

இராஜபாளையம், மார்ச் 24- இராஜபாளையம் ரயில் நிலையத்தில் தேர்தல் அலுவலர் அமர்நாத் தலைமை யிலான பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் பொதிகை ரயில் வந்தது. இராஜபாளையம் வள்ளலார் தெரு வைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையா ளர் மோகன் என்பவரிடம் சோதனை செய்த போது, அவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் இருந்தது. இதற் கான சரியான ஆவணங்கள் அவரிடம் இல் லாததால், பணத்தை பறிமுதல் செய்து தாசில்தார் ராஜீவ் காந்தியிடம் ஒப்படைத்த னர். இதுகுறித்து தாசில்தார் கூறுகையில், எங்களது குழுவினர் சாலையில் வரும் வாகனங்களை சோதனை செய்வதோடு மட்டுமல்லாமல் ரயில் மற்றும் பேருந்து களில் கூட சோதனை செய்து வருகிறோம். பறிமுதல் செய்யும் பணம், பொருட்க ளுக்கு சரியான ஆவணங்களை கொடுத்து விட்டு பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ள லாம் என்றார்.

செல்போன் காணாமல் போனதால் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக் கொலை

சாத்தூர், மார்ச் 24- செல்போன் காணாமல் போனதால் ஏற் பட்ட தகராறில் பெயிண்டர் அடித்து கொலை செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அச்சங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மதிச் செல்வம் (55). இவர் அந்தப் பகுதியில் பெயிண்டராக வேலை செய்தார். மனைவி யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரண மாக தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த உறவினரின் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்கு ராஜபாண்டி (24) என்பவரின் செல்போன் காணாமல் போன தாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மதுபான கடைக்கு மதிச்செல்வம் சென்றுள்ளார். அங்கிருந்த ராஜபாண்டி, அவருடைய சகோதரர் குரு பாண்டி மற்றும் குருபாண்டியின் நண்பர் களான பந்துவார்பட்டி பகுதியைச் சேர்ந்த மனோஜ் மற்றும் நவீன் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது, மதி செல்வத்திடம் காணா மல் போன செல்போனை கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டதோடு சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த மதிச்செல்வம் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப் பதிவு செய்து நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.

விருதுநகர் அருகே ரூ.61 ஆயிரம் பறிமுதல்

விருதுநகர், மார்ச் 24- விருதுநகர் அருகே ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.61,500ஐ பறிமுதல் செய்தனர். விருதுநகர் அருகில் உள்ள ஆர்.ஆர்.நகர் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகனச் சோத னையில் ஈடுபட்டிருந்தனர். அப் போது அவ்வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அதில், முத்துக்குமார் (41) என்பவர் உரிய ஆவணம் இன்றி ரூ.61,500 வைத்திருந்தது தெரியவந்தது. எனவே பணத்தை பறிமுதல் செய்த போலீசார், விருதுநகர் வட் டாட்சியர் அலுவலகத்தில் ஒப்ப டைத்தனர்.

மருத்துவர் வீட்டில் நகை திருட்டு

திருவில்லிபுத்தூர், மார்ச் 24- திருவில்லிபுத்தூரில் அரசு சித்த மருத்துவர் வீட்டில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவில்லிபுத்தூர் அங்குராஜ் நகரைச் சேர்ந்தவர் சுந்தரராஜ மன்னன்(42). இவர் திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். சுந்தரராஜமன்னன் திங்கட்கிழமை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சங்கரன்கோவிலுக்கு சென்றார். இரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலி, 2 கிராம் எடையுள்ள தங்க நாணயங்கள், வெள்ளிக் கொலுசு மற்றும் ரூ.12,500 பணம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது.