முந்தய பக்கம்

ஆண்டிமடத்தில் ரூ.1.23 கோடி திட்டப் பணிகள் துவக்கி வைப்பு

8 Feb 2026, 3:55 pm
ஆண்டிமடத்தில் ரூ.1.23 கோடி திட்டப் பணிகள் துவக்கி வைப்பு
<p><strong>ஆண்டிமடத்தில் ரூ.1.23 கோடி திட்டப் பணிகள் துவக்கி வைப்பு</strong></p> <p>அரியலூர், பிப்.8 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் சிமெண்ட் சாலை அமைத்தல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், சூரக்குழி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் வைப்பறையுடன் கூடிய சமையலறை கட்டிடம் கட்டுதல், விளந்தை தெற்கு கிராமத்தில் உள்ள கல்லறை தோட்டத்தை சுற்றி சுற்றுச்சுவர் அமைத்தல், ன்னங்காரங்குப்பத்தில் புதிய உணவு தானிய கிடங்கு கட்டிடத்தினை திறந்து வைத்தல், இராங்கியம் ஆதிதிராவிடர் தெரு முதல் தஞ்சாவூரான்சாவடி செல்லும் சாலையில் ஆர்சிசி கல்வெட்டு (5மீ) அமைக்கும் பணி, ஏரிகரை நடுத்தெருவில் புதிய ஆழ்குழாய் கிணறு மற்றும் புதிய மின்மோட்டார், கேபிள் மற்றும் உதிரி பாகங்கள் அமைக்கும் பணி என ரூ.1.23 கோடியிலான பல்வேறு பணிகளை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட கூட்டுறவு துணைப் பதிவாளர் சாய்நந்தினி, வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்சாமி (கி.ஊ), மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமாதேவி, பழனியம்மாள், கூட்டுறவு சார் பதிவாளர் மணிபாரதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram