கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
8 Dec 2025, 4:39 pm

செங்கல் சூளைகளுக்கு ரூ.900 கோடி அபராதம்!

கோவை, டிச.8- கோவையில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைக ளுக்கு சுமார் ரூ.900 கோடி அபராதம் விதிக்க மாசுக்கட்டுப் பாட்டு வாரியம் பரிந்துரைத்திருப்பதாக தகவல் வெளியாகி யுள்ளது. கோவை மாவட்டம், சின்ன தடாகம், வீரபாண்டி, நஞ் சுண்டாபுரம், சோமையம்பாளையம், பன்னிமடை பகுதிக ளில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளால், மலையடிவ ராம் அருகேயுள்ள ஓடைகள், நீர்வழித்தடங்களில் சட்ட விரோ தமாக சுமார் 1.10 கோடி கியூபிக் மீட்டர் அளவு மண் அள்ளப் பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த 177 செங்கல் சூளைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைய டுத்து செங்கல் சூளைகள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன. இதற் கிடையே செங்கல் சூளைகளால் ஏற்பட்ட சூழல் பாதிப்பு களை அளவீடு செய்து அவர்களிடம் இழப்பீடு பெற சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் வழக்குத் தொடர்ந்தனர். இதைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் தில்லியைச் சேர்ந்த ஆற்றல், வளங்கள் நிறுவனத்தின் (டெரி) நிபுணர்கள் சுமார் 4 மாதங்கள் ஆய்வு செய்து ரூ.3 ஆயிரம் கோடி அபராதம் விதிக்கலாம் என்று மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு பரிந் துரைத்திருந்தனர். அபராதத் தொகை குறித்து மறுபரி சீலனை செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 3 முறை கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது திருத்தப்பட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் துக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, சூழல் பாதிப்புகளில் ஈடுபட்டதற்காக செங்கல் சூளைகளுக்கு சுமார் ரூ.900 கோடி அபராதம் விதிக்க பரிந் துரைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை மாசுக்கட்டுப் பாட்டு வாரியம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் என்றும் அதன்படி சம்பந்தப்பட்ட செங்கல் சூளை உரிமையாளர்களி டம் இருந்து அபராதத் தொகையை வசூலிக்க நீதிமன்றம் உத் தரவிடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொழிலாளர் துரோக சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் பெரும் போராட்டம் - இரா.முத்தரசன் பேட்டி

கோவை, டிச.8- தொழிலாளர் துரோக சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் டெல்லி விவசாயி கள் போராட்டத்தைவிட பெரிய போராட்டம் நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவர் இரா.முத்தரசன் தெரி வித்தார். கோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திங்களன்று செய்தியாளர்க ளைச் சந்தித்த அக்கட்சியின் மூத்த தலை வர் இரா.முத்தரசன், “29 தொழிலாளர் சட்டங் களை முற்றிலுமாக அழித்துவிட்டு நான்கு தொகுப்புச் சட்டங்களாக மோடி அரசு கொண்டுவந்துள்ளது. இது தொழிலா ளர்களை அடிமைப்படுத்தும் சட்டம். கார்ப்ப ரேட் முதலாளிகளுக்காகவே இச்சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஆட்சியாளர்களின் ஆர்எஸ்எஸ் கொள்கையை தொழிலாளர் கள் மத்தியில் திணிக்கவும், அவர்களை பிளவுபடுத்தவும் இந்த சட்டங்களை பயன்படுத்தப்படுகிறது”. தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை மறுப்பது, பணிக்கொடையை சிதைப்பது, சுரங்கம்-இரசாயன தொழிற்சாலைகளில் பெண்களை இரவுப் பணியில் ஈடுபடுத்த அனுமதிப்பது, தொழிலாளர் நல நிதியை முழுமையாக ஒன்றிய அரசிடம் ஒப்படைப் பது என்பது போன்ற தொழிலாளர் விரோத அம்சங்கள் இதில் உள்ளது. “இச்சட்டங் களை வாபஸ் பெறாவிட்டால் டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தைவிட பெரிய போராட்டத்தை ஒன்றிய அரசு சந்திக்க நேரிடும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

உடுமலையில் பள்ளி மாணவர்களுக்கான வாசிப்பு இயக்கம்

உடுமலை,டிச.8- உடுமலை இலக்கிய களத்தின் சார்பில் அரசுப்பள்ளி மாண வர்களுக்கான வாசிப்பு இயக்கம் உடுமலை மீனாட்சி திருமண மண்டபத்தில் சனியன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர் செல்லத்துரை தலைமை வகித்தார். ஆசிரியர் முனியப்பன் வரவேற்றார். இதில் சோமந்துறை சித்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சோலைமாயவன் வாசிப்பு இயக்கத் தை துவக்கி வைத்து, வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். அரசு பள்ளி நூலகங்களுக்கு வழங்கிய நுழை, நட, ஓடு, பற, ஆகிய கதை புத்தகங்கள் வாசிப்புக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன. இதில் 12 அரசுப்பள்ளிகளை சேர்ந்த 4 ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் 59 மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களை அவர்களது வாசிப்புத்திற னுக்கு ஏற்றபடி குழுவாக பிரித்து புத்தகங்கள் வாசிக்க கொடுக்கப்பட்டன. ஒரு மணி நேரம் புத்தகங்களைப் படித்த மாணவர்கள் தங்களுக்குள் புத்தகங்களை மாற்றிக் கொண்டு புத்தகங்களை வாசித்தனர். பின்னர் வாசித்த புத்தகங்களில் உள்ள கதைகளை மாணவர்கள் அவையில் எடுத்துக் கூறினர். கவிஞர் இளையவன் சிவா, ஆசிரியர் சந்திரசேகர் மற்றும் ஆசி ரியை சுமித்ரா பொள்ளாச்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியை ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிறைவாக ஆசிரியர் ஈஸ்வரசாமி நன்றி கூறினார்.

நாளை மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

அவிநாசி டிச.8 - அவிநாசி மின் கோட்டத்திற்குட்பட்ட மின் நுகர்வோர் களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் வரும் புதன்கிழமை, டிசம்பர் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. அவிநாசி மங்கலம் சாலையில் அமைந்துள்ள தமிழ் நாடு மின்சார வாரியத்தின் மின் கோட்ட செயற்பொ றியாளர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு இக்கூட்டம் நடை பெறுகிறது. திருப்பூர் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர் என அவி நாசி மின் கோட்ட செயற்பொறியாளர் சந்திரசேகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.