தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரூ.5,432 கோடி காவிரி - அமராவதி உபரி நீர் திட்டம் மூலம் திண்டுக்கல் ஏரி குளங்கள் நிரப்பப்படும்!

10 Apr 2026, 5:30 am
ரூ.5,432 கோடி காவிரி - அமராவதி உபரி நீர் திட்டம் மூலம் திண்டுக்கல் ஏரி குளங்கள் நிரப்பப்படும்!

ரூ.5,432 கோடி காவிரி - அமராவதி உபரி நீர் திட்டம் மூலம் திண்டுக்கல் ஏரி குளங்கள் நிரப்பப்படும்!

அமைச்சர் அர.சக்கரபாணி வாக்குறுதி சின்னாளப்பட்டி, ஏப்.8- திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்ட உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, பல்வேறு ஊராட்சிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்தார்.

அப்போது, ஒட்டன்சத்திரம் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக திமுக ஆட்சியின் சாதனைகளாக புதிய சமுதாயக் கூடங்கள், அங்கன்வாடி மையங்கள், நூலகங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை அமைச்சர் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், ரூ. 5,432 கோடி மதிப்பீட்டில் அமராவதி-காவிரி ஆறுகளை இணையும் இடத்தில் செல்லும் உபரி நீரைப் பயன்படுத்தி திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஏரி, குளங்களை நிரப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று உறுதியளித்தார். மேலும், கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கான கடன் உதவி உயர்வு குறித்தும் தெரிவித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.