ரயிலில் டிக்கெட் இன்றி பயணம் செய்தவர்களிடம் ரூ.17.52 கோடி அபராதம் வசூல்
5 Jan 2026, 6:21 pm
<p><strong>ரயிலில் டிக்கெட் இன்றி பயணம் செய்தவர்களிடம் ரூ.17.52 கோடி அபராதம் வசூல் </strong></p>
<p>கோவை, ஜன.5- தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டத்தில் கடந்த 2025 ஏப் ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான ஒன்பது மாத காலத்தில் நடத்தப்பட்ட தீவிர டிக்கெட் பரிசோதனை மூலம் 17 கோடியே 52 லட்சத்து 58 ஆயிரத்து 394 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் இன்றி பயணம் செய்வது குற்றமாகும் என்பதை வலியுறுத்தி யும், பயணிகள் முறையான டிக்கெட்டுகளைப் பெற்று பய ணம் செய்ய வேண்டும் என்று இந்த சோதனைகள் மேற்கொள் ளப்பட்டன. சேலம் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் எம்.வாசுதேவனின் வழிகாட்டுதலின்படி, டிக்கெட் பரி சோதனை குழுவினர் ரயில்களிலும், ரயில் நிலைய வளாகங்க ளிலும் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளால் இந்த சாதனை எட்டப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத் தில் மட்டும் மொத்தம் 47,134 சோதனைகள் நடத்தப்பட்டு, பல் வேறு விதிமீறல்கள் தொடர்பாக 2 லட்சத்து 36 ஆயிரத்து 669 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் டிக்கெட் இன்றி பயணம் செய்ததாக 1 லட்சத்து 27 ஆயிரத்து 161 வழக்கு கள் கண்டறியப்பட்டு ரூ.11.04 கோடி அபராதமாக வசூலிக்கப் பட்டது. இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தோடு ஒப் பிடும்போது 12.7 சதவீத வளர்ச்சியாகும். அதேபோல் முறை யற்ற பயணங்கள் தொடர்பாக 1 லட்சத்து 8 ஆயிரத்து 914 வழக்குகள் மூலம் ரூ.6.44 கோடி வசூலானது. அனுமதிக்கப் பட்ட அளவை விட அதிக சுமை மற்றும் முன்பதிவு செய்யப் படாத லக்கேஜ்கள் கொண்டு வந்த 594 வழக்குகள் மூலம் ரூ.3.32 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் மட்டும் நடத்தப்பட்ட சோதனைக ளில் டிக்கெட் இல்லாத பயணம் மற்றும் முறையற்ற பயணம் என மொத்தம் ரூ.2.06 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள் ளது. பயணிகள் தங்களது பயணத்தை சிரமமின்றி மேற் கொள்ள, முன்பதிவு செய்யும் போது குறிப்பிட்ட நிலையத்தி லேயே ரயிலில் ஏற வேண்டும் என்றும், யாருடைய பெயரில் டிக்கெட் எடுக்கப்பட்டதோ அவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள் ளது. மேலும், முதியோர் ஒதுக்கீட்டை தவறாக பயன்படுத் துவது, டிக்கெட் இல்லாத பயணமாக கருதப்படும் என்றும், வகுப்பு வாரியாக அனுமதிக்கப்பட்டுள்ள லக்கேஜ் அளவு களைப் பின்பற்றி அபராதத்தை தவிர்க்குமாறும் சேலம் ரயில்வே நிர்வாகம் பயணிகளை கேட்டுக்கொண்டுள்ளது.</p>
