முந்தய பக்கம்

பாஜக ஆளும் ஹரியானாவில்  ரூ.1,500 கோடி ஊழல் வாக்குத் திருட்டு

3 Jan 2026, 2:20 pm
பாஜக ஆளும் ஹரியானாவில்  ரூ.1,500 கோடி ஊழல் வாக்குத் திருட்டு
<p><strong>பாஜக ஆளும் ஹரியானாவில் &nbsp;ரூ.1,500 கோடி ஊழல் வாக்குத் திருட்டு</strong></p> <p>குற்றச் சாட்டுக்கு இடையே 2024ஆம் ஆண்டு நடை பெற்ற ஹரியானா சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. நயாய் சிங் சைனி மீண்டும் முதலமைச்சராக பதவி யேற்றார். இந்நிலையில், ஹரியானா மாநில தொழிலாளர் நலத்துறையில் சுமார் ரூ.1,500 கோடி அளவிலான மெகா ஊழல் அரங்கேறியுள்ளது. தொழிலா ளர் நல வாரியத்தில் இருக்கும் நிதி யைப் பெறுவதற்காக, கட்டுமானப் பணியில் ஈடுபடாத ஆயிரக்கணக்கான நபர்களைப் போலியாகத் தொழிலா ளர்களாகப் பதிவு செய்து, அவர்க ளுக்குப் போலி &ldquo;ஒர்க் ஸ்லிப்கள்&rdquo; வழங் கப்பட்டுள்ளன. &nbsp;இந்தியாவில் கட்டுமானத் தொழிலாளர்கள் அரசு சலுகைகளைப் பெற வேண்டுமானால், அவர்கள் ஆண்டு க்குக் குறைந்தபட்சம் 90 நாட்கள் வேலை &nbsp;செய்திருக்க வேண்டும். இதற்கான ஆதாரமே &lsquo;ஒர்க் ஸ்லிப்&rsquo; என்ற நிலை யில், போலி &lsquo;ஒர்க் ஸ்லிப்&rsquo; மூலம் சுமார் ரூ.1,500 கோடி ரூபாய் நலத்திட்ட நிதி முறைகேடாகக் கையாளப்பட்டுள்ளது. இதில் துறை சார்ந்த அமைச்சருக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படு கிறது. முறைகேடு &nbsp;கசிந்தவுடன் மழுப்பல் ஹரியானா மாநிலத்தின் எரிசக்தி, போக்குவரத்து மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக அனில் விஜ் உள்ளார். இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு மிக நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. இவரது துறை யின் கீழ் தான் ரூ.1,500 கோடி ஊழல் அரங்கேறியுள்ளது. &nbsp;ஊழல் விவகாரம் வெளியே கசிந்தவுடன் போலிப் பதிவுகளைக் கண்டறிய அதிகாரிகளுக்கு அமைச்சர் அனில் விஜ் மட்டுமே உத்தரவிட்டுள்ளார். ஆனால் வேறு எதுவும் அவர் விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram