நொய்யலை சீரமைக்க ரூ.178.48 கோடி ஒதுக்கீடு
29 Jan 2026, 5:39 pm
<p><strong>நொய்யலை சீரமைக்க ரூ.178.48 கோடி ஒதுக்கீடு</strong></p>
<p>கோவை, ஜன.29- கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிக ளில் நொய்யல் ஆற்றின் தூய்மையை பாதுகாக்க வும், கரைகளை நவீனப்படுத் தும் வகையிலும் ரூ.178.48 கோடி மதிப்பீட்டில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலை யில் கோவை குற்றாலத்தில் தொடங்கி 158.35 கி.மீ நீளத்திற்கு பாயும் நொய்யல் ஆறு, கோவை மாநகராட்சி எல்லைக்குள் 18.56 கி.மீ நீளத்திற்கு அமைந்துள்ளது. தற் போது இந்த ஆற்றின் கரையில் உள்ள குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலை களிலிருந்து வெளியேறும் கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுக்கும் வகையில், விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு தமிழ் நாடு அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஆத்துப்பாலம் சந்திப்பு முதல் நஞ்சுண்டாபுரம் சந்திப்பு வரை 4.30 கி.மீ நீளத்திற்கு ஆற்றின் இரு கரைகளி லும் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப் படும். குறிப்பாக, கழிவுநீர் கலப்பதை தடுக்க 10.80 கி.மீ நீளத்திற்கு கழிவுநீர் கொண்டு செல்லும் பிரதான குழாய்கள் அமைக்கப்படுவதோடு, கல்லாமேடு, என்.பி.இட்டேரி மற்றும் பட்டணம் சாலை ஆகிய மூன்று இடங்களில் கழிவுநீர் உந்து நிலை யங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும், முத்து காலனி, என்.பி.இட்டேரி மற்றும் பெரு மாள் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மூன்று கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக் கப்பட்டு, நாளொன்றுக்கு மொத்தம் 10 மில்லி யன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட உள் ளது. ஆற்றின் கரைகளை பலப்படுத்த ஜியோ-செல் அமைப்பு மற்றும் காபியன் சுவர்கள் கட்டப்படுவதோடு, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நடைபாதைகள், மிதி வண்டிப் பாதைகள் மற்றும் படித்துறைகள் உருவாக்கப்பட உள்ளன. ஆற்றின் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் விதமாக ஆங் காங்கே குப்பைத் தடுப்பு மிதவை அமைப்பு கள், 307 சூரிய ஆற்றல் விளக்குகள் மற்றும் 8 சூரிய ஆற்றல் மர விளக்குகள் நிறுவப் படும். பொழுதுபோக்கு வசதிக்காக ஆசாத் நகர், ராஜீவ் காந்தி நகர், வெள்ளலூர், போத்தனூர் ஆகிய இடங்களில் நான்கு புதிய பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. இது தவிர, இரும்புப் பாலங்கள், ஓய்வுப் பகுதி கள் மற்றும் கண்காணிப்பு மேடைகளும் இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. நொய் யல் ஆற்றின் இயற்கை எழிலை மீட்கும் இந்தப் பணிகள் மிக விரைவில் தொடங்கப் படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித் துள்ளது.</p>
