முந்தய பக்கம்

புதிதாக 17 லட்சம் மகளிருக்கு தலா ரூ.1000!

12 Dec 2025, 2:40 pm
புதிதாக 17 லட்சம் மகளிருக்கு தலா ரூ.1000!
<p><strong>புதிதாக 17 லட்சம் மகளிருக்கு தலா ரூ.1000!</strong></p> <p>திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார் சென்னை, டிச. 12 - குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வங்கிக் &nbsp;கணக்குகளில் வரவு வைக்கப் படும் என்று 2021-ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் அறி விக்கப்பட்டது. அதன்படி ஆட்சிக்கு வந்த பிறகு 2023 செப்டம்பர் 15 அன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் என்ற பெயரில் முத லமைச்சர் மு.க. ஸ்டாலின், முதற் கட்டமாக சுமார் 1 கோடியே 13 &nbsp;லட்சத்து 75 ஆயிரத்து 492 மகளிர்க்கு தலா ரூ. 1000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மாதந்தோறும் 15ஆம் தேதி யன்று அவரவர் வங்கி கணக்கு களில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதற்கட்டத் திட்டத்தில், விடுபட்ட மகளிரிடம் மீண்டும் மனுக்களைப் பெற்று, அவர்களில் தகுதியானவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று அறி வித்த முதலமைச்சர் மு.க. ஸ்டா லின், அதன்படி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வெள்ளிக் கிழமையன்று நடைபெற்ற நிகழ்வில் சுமார் 17 லட்சம் பெண் களுக்கு தலா ரூ. 1000 வழங்கும் விரி வாக்கத் திட்டத்தை துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் திட்டங்களின் மூலம் பயனடைந்த பெண்களின் சாதனைகளை வெளிப்படுத்தும் விதமாக &lsquo;வெல்லும் தமிழ்ப் பெண் கள் விழா&rsquo;வும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச் சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram