முந்தய பக்கம்

ரூ.590 கோடியா?  ரூ.556 கோடியா?

24 Feb 2026, 3:55 pm
ரூ.590 கோடியா?  ரூ.556 கோடியா?
<p><strong>ரூ.590 கோடியா? &nbsp;ரூ.556 கோடியா?</strong></p> <p>சண்டிகர் ஐடிஎப்சி கிளையில் பணியாற்றும் சில அதிகாரிகள், பாஜக ஆளும் ஹரியானா அர சாங்க கணக்குகளில் இருந்து ரூ.590 கோடியை கையாடல் செய்துள்ளதாக ஞாயிறன்று செய்திகள் வெளியா கின. இந்த மோசடியில் ஊழியர்களுக்கு &nbsp;மட்டுமின்றி, வெளிநபர்களுக்கும் தொடர்பு இருப்பதாக ஐடிஎப்சி நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான வி.வைத்தியநாதன் திங்களன்று தெரிவித்தார். இந்நிலையில், ஐடிஎப்சி வங்கியிடம் இருந்து ரூ.556 கோடி பெற்றுள்ளதாக ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி செவ்வாயன்று அம்மாநில சட்ட மன்றத்தில் தெரிவித்தார். இதுதொடர் பாக அவர் மேலும் கூறுகையில், &ldquo;ஐடிஎப்சி வங்கியிடம் துரித கால நடவடிக்கையாக ரூ.556 கோடி, ரூ.22 கோடி வட்டியுடன் சேர்த்து வெறும் 24 மணி நேரத்திற்குள் திரும்பப் பெறப் பட்டுள்ளது&rdquo; என அவர் கூறினார். &nbsp;முன்னதாக, ஐடிஎப்சி வங்கியில் ஹரியானா அரசு கணக்கில் ரூ.590 கோடி கையாடல் செய்யப்பட்டதாக கூறப் பட்டது. ஆனால் தற்போது ரூ.34 கோடி குறைவாக பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram