தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாய்ப்பு வாசல் - அமர்த்தியா

17 Jun 2026, 9:03 pm
வாய்ப்பு வாசல் - அமர்த்தியா

ரயில்வேயில் 6,565 பணியிடங்கள்

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள (Technician Grade-I & Technician Grade-III) பணியிடங்களை நிரப்புவ தற்காக Railway Recruitment Board (RRB) தேர்வு நடைபெற வுள்ளது. இந்தத் தேர்வு மூலம் மொத்தம் 6565 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பம் வெளியாகியுள்ளது.

கல்வித் தகுதி – Technician Grade-I (Signal) பணியிடங்களுக்கு B.E./B.Tech. அல்லது அதற்கு இணையான பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Technician Grade-III பணியிடங்களுக்கு 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் ITI –யில் NCVT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு – விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் 33 வயது வரையும், Technician Grade-III பணி யிடங்களுக்கு 18 வயது முதல் 30 வயது வரையும் விண்ணப்பிக்கலாம். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது தளர்வு வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை – விண்ணப்பதாரர்கள் கணினி வழித் தேர்வு (CBT), ஆவணச் சரிபார்ப்பு மற்றும் மருத்துவத் தகுதித் தேர்வு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் – பொதுப் பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவின ர்கள் ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள், முன்னாள் இராணுவத்தினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை – இந்தப் பணியிடங்களுக்கான பாடவாரியான காலியிடங்கள், தேர்வு முறை, பாடத்திட்டம் மற்றும் பிற விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளன. முழுமையான அறிவிப்பை பெற https://www.rrbapply.gov.in/ இணையதளத்தைப் பார்வையிட லாம். விண்ணப்பிப்பதற்கான கடை சித் தேதி ஜூலை 29, 2026 ஆகும்

இந்துஸ்தான் காப்பர் லிமிடெட்

பொதுத்துறையைச் சார்ந்த இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் 70 மேலாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பம் வெளியாகி உள்ளது. இன்ஜினியரிங் போன்ற பல்வேறு துறையில் பிரிவுகளில் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. உதவி மேலாளர் பணிக்கு அதிகபட்சம் 40 வயதுக்குள் இருக்க வேண்டும் மற்றும் மேலாளர் பணிக்கு 47 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் எஸ்சி / எஸ்டி பிரிவினர்களுக்கு ஐந்து வருடங்கள் வயதுவரம்பில் தளர்ச்சி உண்டு. ஓபிசி பிரிவினர்களுக்கு மூன்று வருடங்கள் சலுகை அளிக்கப்படும். தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இதர பிரிவினர்களுக்கு ரூபாய் 500 செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். எஸ்சி /எஸ்டி பிரிவினர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. தேர்வு முறை பாடத்திட்டம் மற்றும் பிற விபரங்களுக்கு அறிய https://www.hindustancopper.com/ இணையதளத்தை பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி ஜூன் 25, 2026 ஆகும்.

எஸ்எஸ்சி-இல் 227 பணியிடங்கள்

ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 227 Junior Secretariat Assistant (JSA) பணியிடங்களை நிரப்புவதற்காக Staff Selection Commission (SSC) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத் தேர்வு மூலம் மொத்தம் 227 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பம் வெளியாகியுள்ளது.

தகுதி – ஒன்றிய அரசு துறையில் Junior Secretariat Assistant, Junior Division Clerk போன்ற ஏதேனும் பணியில் ஐந்து வருட அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

வயது வரம்பு – ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது தளர்வு வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை – விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, ஆவணச் சரிபார்ப்பு மற்றும் பிற தகுதித் தேர்வுகளின் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை – இந்தப் பணியிடங்களுக்கான காலியிடங்கள், தேர்வு முறை, பாடத்திட்டம் மற்றும் பிற விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளன. முழுமையான அறிவிப்பை பெற https://ssc.gov.in/ அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி ஜூலை 10, 2026 ஆகும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.