தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாய்ப்பு வாசல்

23 Sept 2026, 8:27 pm
வாய்ப்பு வாசல்

வாய்ப்பு வாசல்

RRB NTPC 3,477 காலி பணியிடங்கள்

மத்திய அரசின் ரயில்வே துறையில் NTPC பணிகளுக்கான 3,477 (உத்தேச எண்ணிக்கை) காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. சரக்கு ரயில் மேலாளர் (Goods Train Manager), தலைமை வணிகம் மற்றும் டிக்கெட் மேற்பார்வையாளர் (CCTS), இளநிலை கணக்கு உதவியாளர் மற்றும் தட்டச்சர் (JAA), மூத்த எழுத்தர் மற்றும் தட்டச்சர் (Senior Clerk cum Typist) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது ஏழாவது ஊதியக்குழுப் பரிந்துரையில் உள்ள Level 5 மற்றும் Level 6 பணிகளுக்கான CEN 06/2026 அறிவிப்பாகும். அறிவிக்கை விரைவில் வெளியாகும்.

கல்வித்தகுதி – ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு – ஜனவரி 1, 2027 தேதியின்படி குறைந்த பட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 33 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓபிசி பிரிவினர்களுக்கு மூன்று வருடங்களும், எஸ்சி/எஸ்டி பிரிவினர்களுக்கு ஐந்து வருடங்களும், பிற இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பில் தளர்ச்சி வழங்கப்படும்.

தேர்வு முறை - முதல்நிலை கணினி வழித் தேர்வு (CBT 1), இரண்டாம் நிலை கணினி வழித் தேர்வு (CBT 2), திறனறித் தேர்வ, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம் - பொது மற்றும் ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.500 மற்றும் பெண்கள், எஸ்சி/எஸ்டி பிரிவினர்களுக்கு ரூ. 250 கட்டணம் செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் முழுமையான அறிவிப்பை பெற https://rrb.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தில்பார்வையிடலாம்.ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் அக்டோபர் 8, 2026.விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 6, 2026 ஆகும்.

எஸ்எஸ்சி-யில் 2536 காலி பணியிடங்கள்

மத்திய அரசால் நடத்தப்படும் எஸ்எஸ்சி தேர்வின் மூலம் கீழ்நிலை எழுத்தர் (LDC), இளநிலை செயலக உதவியாளர் (JSA), தரவு உள்ளீட்டு இயக்குநர் (DEO) உள்ளிட்ட2536 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது.

கல்வித்தகுதி – +2 வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் உள்ளீட்டு இயக்குநர் பணிக்கு 12-ஆம் வகுப்பில் கணித பாடப்பிரிவில் பயின்றிருக்க வேண்டும். உள்ளீட்டு இயக்குநர் பணிக்கு ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு - குறைந்த பட்சமாக 18 வயது முதல் அதிகபட்சமாக 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அக்டோபர் 7, 2026 தேதியின்படி ஓபிசி பிரிவினர்களுக்கு மூன்று வருடங்களும், எஸ்சி/எஸ்டி பிரிவினர் களுக்கு ஐந்து வருடங்களும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் விதிமுறைகளின் படி வயது தளர்ச்சி வழங்கப்படும்.தேர்வு முறை – SSC (CHSL) தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். இத் தேர்வானது இரண்டு கட்டங்களாக நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம் - பொது மற்றும் ஓபிசி பிரிவினர்களுக்கு ரூ.100 கட்டணம் செலுத்தி ஆன்லை னில் விண்ணப்பிக்கலாம். பெண்கள், எஸ்சி/எஸ்டி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை – எழுத்துத் தேர்விற்கான முழுமை யான பாடத்திட்டம், கூடுதல் தகுதி,

தேர்வு நடைபெறும் இடம், முழுமையான அறிவிப்பு மற்றும் ஆன்லைன் விண்ணப்ப விவரங்களை பெற https://ssc.gov.in/ என்ற இணைய தளத்தை பார்வையிடலாம்.விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 7, 2026 ஆகும்.

துணை ராணுவத்தில் 1871 காலி பணியிடங்ள்

மத்திய துணை ராணுவ படையில் சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு 1871 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பம் வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கு 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்எஸ்சி ஆல் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு, உடற்த்தகுதித் தேர்வு மற்றும் மருத்துவத் தகுதி தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இதர பிரிவினர்களுக்கு ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்கலாம். பெண்கள் எஸ்சி/எஸ்டி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. மேலும் முழுமையான அறிவிக்கை, தேர்விற்கான பாடத்திட்டம், பாடவாரியான காலி பணியிட பகிர்வு வயதுவரம்பு போன்ற முழுமையானதகவல்களை பெற https://ssc.gov.in/ என்ற இணையதளத்தை பார்வையிடலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்செப்டம்பர் 30, 2026 ஆகும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.