ராயபுரம் மேற்கு மாதா தெருவில் கடைகளை அப்புறப்படுத்த கூடாது! சாலையோர வியாபாரிகள் கோரிக்கை
10 Jun 2026, 11:58 pm
<p><strong>ராயபுரம் மேற்கு மாதா தெருவில் கடைகளை அப்புறப்படுத்த கூடாது! சாலையோர வியாபாரிகள் கோரிக்கை</strong></p><p>சென்னை, ஜூன் 10- ராயபுரம் மேற்கு மாதா தெருவில் கடைகளை அப்புறப்படுத்த கூடாது என சாலையோர வியா பாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சென்னை மாவட்ட சாலை யோர சிறுகடை விற்பனை யாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் டி.வெங்கட் தலைமையில் நகர விற்பனை குழு உறுப்பினர் கே.பலராமன், சிபிஎம் பகுதிச் செயலாளர் எஸ்.பவானி உள்ளிட்டோர் மண்டலம் 5 அதிகாரி விஜயபாஸ்கரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட 50ஆவது வார்டு மேற்கு மாதா கோயில் தெருவில், கடந்த 30 ஆண்டுகளாக 30க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் போக்கு வரத்துக்கு இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் செவ்வாய் கிழமை உதவி பொறியாளர் கடைகள் போடக்கூடாது, உடனே காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் ஒட்டியுள்ளார். வெண்டிங் கமிட்டி மூலம் மேற்கு மாதா கோயில் தெருவை விற்பனை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்துள்ளோம். எனவே வரும் கமிட்டி கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கும் வரை வியாபாரிகளை அப்புறப் படுத்தக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம்.</p>
