முந்தய பக்கம்

ராயபுரத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க வியாபாரிகள் கோரிக்கை

1 Jul 2026, 11:36 pm
ராயபுரத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை  விரைந்து முடிக்க வியாபாரிகள் கோரிக்கை
<p><strong>ராயபுரத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க வியாபாரிகள் கோரிக்கை</strong></p><p>சென்னை, ஜூலை 1- சென்னை மாவட்ட சாலையோர சிறுகடை விற்பனையாளர்கள் சங்கத்தின் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் எம்.சி. ரோடு கிளை சார்பில் ராயபுரம் சட்டமன்ற் உறுப்பினர் விஜய் தாமுவை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், 20 ஆண்டுகளுக்கும் மேலாக எம் சி ரோடு சாலை யோரம் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடிந்தவுடன் அந்த இடத்திலேயே மாநகராட்சி அறிவுறுத்தலின்படி கடை கள் ஒதுக்கீடு செய்ய நட வடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளன. மனுவை பெற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதில் மாவட்டச் செயலாளர் டி.வெங்கட், சிபிஎம் பகுதிச் செயலாளர் எஸ்.பவானி, சங்க கிளை செயலாளர் பி.பாக்கிய லட்சுமி, பொருளாளர் ரபீக், நிர்வாகிகள் மணி மேகலை, அருள், சிவ காமி, பாக்கியம், ஜெயந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram