முந்தய பக்கம்

தங்கக் காசு மோசடி வழக்கில் ராயபுரம் காவல் ஆய்வாளர் கைது-பணியிடைநீக்கம்!

10 hours before
தங்கக் காசு மோசடி வழக்கில் ராயபுரம் காவல் ஆய்வாளர் கைது-பணியிடைநீக்கம்!
<p>தங்கக்காசு மோசடி வழக்கில் காவல் ராயபுரம் காவல் ஆய்வாளர் ஷீலா மேரி கைது செய்யப்பட்டதோடு, பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.</p><p>சென்னை ராயபுரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஷீலா மேரி, குறைந்த விலையில் தங்கக்காசுகள் மற்றும் வீட்டு மனைகள் வழங்குவதாகக் கூறி சுமார் ரூ.20 கோடி மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p><p>இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரபு மணி ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், விசாரணையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) போலீசார் நேற்று இரவு ஷீலா மேரியையும் கைது செய்தனர்.</p><p>கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஷீலா மேரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ரூ.20 கோடி மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram