தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ராயபுரம் எம்.சி. ரோடு வணிக வளாகத்தை சீரமைக்க வியாபாரிகள் கோரிக்கை

8 Jul 2026, 10:48 pm
ராயபுரம் எம்.சி. ரோடு வணிக வளாகத்தை சீரமைக்க வியாபாரிகள் கோரிக்கை
<p><strong>ராயபுரம் எம்.சி. ரோடு வணிக வளாகத்தை சீரமைக்க வியாபாரிகள் கோரிக்கை</strong></p><p>சென்னை, ஜூலை 8- ராயபுரம் எம்.சி. ரோடு வணிக வளாகத்தை சீரமைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி எம்.சி. ரோடு வணிக வளாக சிறுகடை வியாபாரிகள் சங்கம் சட்டமன்ற உறுப்பினர் விஜய் தாமுவிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், சென்னை பழைய வண்ணாரப்பேட்டை எம்.சி. ரோடு, 51ஆவது வட்ட பகுதியில் 133 கடைகளுடன் வணிக வளாகம் அமைந்துள்ளது. இந்த கடைகளுக்கு மாநகராட்சிக்கு மாதம் 700 ரூபாய் வீதம் வாடகை செலுத்தி வருகிறோம். வணிக வளாகத்திற்கும் ராபின்சன் மைதானத்திற்கும் இடையில் உள்ள நீண்ட சுவர் பல இடங்களில் உடைந்துள்ளது. புதிய சுவர் கட்டுவதற்கு மாநகராட்சி டெண்டர் விட்டதாகவும் தகவல் உள்ளது. ஆனால் இன்னும் வேலை துவங்கவில்லை. மைதானத்தில் விளையாடும் நபர்கள் சுவர் ஓட்டை வழியாக வணிக வளாகத்திற்குள் அடிக்கடி வருகின்றனர். வெளியாட்களும் வந்து போகின்றனர். இதனால் சில நேரங்களில் வியாபாரம் கெடுகிறது. இரவு நேரத்தில் பனியன் பண்டல், சேலைகள், ரெடிமேட் துணிகள் போன்ற வியாபார பொருட்கள் திருடு போய் உள்ளது. எனவே பொருட்கள் திருடு போவதை தடுக்கவும், வியாபார நேரத்தில் ஏற்படும் சிரமத்தை போக்கவும் உடனடியாக சுவர் கட்டி முடிக்கப்பட வேண்டும். கடைகள் திறந்தே இருப்பதால் வியாபார பொருட்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே ஒவ்வொரு கடைகளுக்கும் தனித்தனியாக ஷட்டர் அமைத்து தர வேண்டும். பழுதடைந்துள்ள வணிக வளாக முகப்பு கேட்டை சீரமைக்க வேண்டும். வணிக வளாக கேட் முகப்பின் மேற்பகுதியில் நிழலுக்காக கூரை அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி எங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என அதில் கூறப்பட்டுள்ளது. உடனே ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்ற உறுப்பினர் உறுதியளித்தார். இதில் மாவட்டச் செயலாளர் டி.வெங்கட், சிபிஎம் பகுதிச் செயலாளர் எஸ்.பவானி, சங்கத்தின் தலைவர் கே.செல்வானந்தன், செயலாளர் எஸ்.காசிம், பொருளாளர் எஸ்.பாலையா நிர்வாகிகள் மாரி, சரளா, விஜயராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.