முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

16 Mar 2026, 4:46 pm
சென்னை விரைவு செய்திகள்

ரவுடி தொப்பை கணேசன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

சென்னை, மார்ச் 16- சென்னை மாதவரம் அருகே, கடந்த ஜனவரி 30-ஆம் தேதி நடைபெற்ற ரூ. 25 லட்சம் மற்றும் 15 சவரன் நகை கொள்ளை வழக்கின் முக்கியக் குற்றவாளியான ‘தொப்பை’ கணேசன் (38) திங்களன்று (மார்ச் 16) அதிகாலை போலீசாரால் என்கவுன்டர் செய்யப் பட்டார். மீஞ்சூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தலைமறைவாக இருந்த கணேசன், மாதவரம் மஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள பழைய கட்டடத்தில் பதுங்கியிருப்பதை அறிந்த தனிப்படை போலீ சார், அவரைச் சுற்றி வளைத்தனர். அப்போது அவர்களை தாக்கிவிட்டுத் தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. தற்காப்பிற்காக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கணேசன் பலத்த காயமடைந்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியி லேயே உயிரிழந்தார். இந்தத் தாக்குதலில் உதவி ஆய்வாளர் சுப்பிரமணி மற்றும் காவலர் தினேஷ் ஆகியோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வரு கின்றனர். இவர் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி என 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலு வையில் உள்ளதும், இவர் ‘ஏ பிளஸ்’ வகை சரித்திரப் பதிவு குற்றவாளி என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் தேதி அறி விக்கப்பட்ட அடுத்த நாளே தலைநகரில் இச்சம்ப வம் நிகழ்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது

பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை ஆட்சியர் அலுவலகப் பெட்டியில் போடலாம்

விழுப்புரம், மார்ச் 16- விழுப்புரம் மாவட்ட த்தில் தேர்தல் நடத்தை விதி கள் அமலானதால், வாரந்  தோறும் திங்கட்கிழமைக ளில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர் கூட்டம், தேர்தல் முடிந்து மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதில் மாவட்ட மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேரடியாக மனு கொடுத்து வந்தனர். தற்போது தேர்தல் தேதி அறிவிப்பு வந்தவுடன் நடத்தை விதிகள் அம லுக்கு வந்துள்ளதால், மனு கொடுக்க வரும் பொது மக்கள் தங்கள் மனுக்க ளைப் போடும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் மனு போடும் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram