தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாய்ப்பு வாசல்

16 Mar 2026, 4:46 pm
வாய்ப்பு வாசல்

வங்கி  துணை  மேலாளர்கள் - 1100

ஐடிபிஐ(IDBI) வங்கியில் துணை மேலாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. பட்டப்படிப்பு நிறைவு செய்து 20 முதல் 25 வயதுக்குள் உள்ளவர்கள்(மார்ச் 1, 2026 அன்று) இந்தப் பணியிட நிரப்புதலுக்கு விண்ணப்பிக்க லாம். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாகப் பணியிடங்கள் நிரப்பப்படும். காலிப்பணியிடங்கள் சென்னை(70), பெங்களூரு(75), தில்லி(130), மும்பை(130), லக்னோ (85) மற்றும் பல்வேறு இடங்களில் உள்ளன. இது பற்றிய முழு விபரங்கள், தேர்வுக்கட்டணம், தேர்வுத்தேதி உள்ளிட்ட விபரங்களுக்கு www.idbi.bank.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்கு கடைசித் தேதி மார்ச் 19, 2026 ஆகும்.

ஆராய்ச்சி மையத்தில் காலிப்பணியிடங்கள்

ஒன்றிய அரசின் கீழ் இயங்கி வரும் ரேடியோ அஷ்ட்ரோபிசிக்ஸ் (Radio Astr ophysics) ஆராய்ச்சி மையத்தில் உதவியாளர் பணிகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பம் தற்போது வெளியாகியுள்ளது. கல்வித் தகுதி – ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Diploma, B.E./B.Tech /B.Scமுடித்திருக்க வேண்டும். என்ஜினியரிங் பணிகளுக்கு Civil, Electrical, Electronics /Electronics & Communication Engineering-ல் B.E./B.Tech படித்திருக்க வேண்டும். டெக்னிக்கல் பணிகளுக்கு Civil, Electrical /Electronics Engineering-இல் Diploma படித்திருக்க வேண்டும். அறிவியல் உதவியாளர் பணிகளுக்கு Physics, Electronics /Information Technology-இல் B.Sc பட்டம் தேவை. வயது வரம்பு – குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 28 வயது வரை என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்சி/எஸ்டி பிரிவினர்களுக்கு 5  வருடமும் ஓபிசி பிரிவினர்களுக்கு  3 வருடமும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும் அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் முறை –எழுத்துத் தேர்வு, திறனறித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பிக்கும் முறை -  இந்தப் பணியிட நிரப்புதல் குறித்த பாடவாரியான காலியிடங்களின் எண்ணிக்கை, தேர்விற்கான விண்ணப்பம், விரிவான பாடத்திட்டம், மதிப்பெண் விபரம் உள்ளிட்ட கூடுதல் விபரங்கள் அறிவிக்கையில் முழுமையாகத் தரப்பட்டுள்ளன. முழுமையான அறிவிக்கையைப் பெற https://tinyurl.com/ncrajob2026 என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி மார்ச் 20,  2026 ஆகும்.

ஹிந்துஸ்தான் நிறுவனத்தில் 730 காலிப் பணியிடங்கள்

இந்திய அரசின் கீழ் செயல்படும் HPCL (Hindustan Petroleum Corporation Limited) எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனத்தில் ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ் பிரிவில் 730 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. கல்வித் தகுதி – B.E/B.Tech  (Mechanical, Electrical, Civil, Chemical போன்ற பொறியியல் துறைகள்) /MBA போன்ற ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு – குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 30 வயது வரை என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. தேர்வு முறை - எழுத்து தேர்வு CBT முறையில் நடத்தப்படும். பிறகு குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பக் கட்டணம் – இதர பிரிவினருக்கு ரூ. 1,800/- செலுத்தி ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி., முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் இல்லை. விண்ணப்பிக்கும் முறை   -  இந்தப் பணியிட நிரப்புதல் குறித்த பாடவாரியான காலியிடங்களின் எண்ணிக்கை, தேர்விற்கான விண்ணப்பம், விரிவான பாடத்திட்டம், மதிப்பெண் விபரம் உள்ளிட்ட கூடுதல் விபரங்கள் அறிவிக்கையில் முழுமையாகத் தரப்பட்டுள்ளன. முழுமையான அறிவிக்கையைப் பெற https://www.hindustanpetroleum.com  என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி  மார்ச் 25, 2026 ஆகும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.