முந்தய பக்கம்

ரோட்டரி சங்கம் குடிநீர் இயந்திரம் வழங்கல்

26 Sept 2026, 10:07 pm
ரோட்டரி சங்கம் குடிநீர் இயந்திரம் வழங்கல்

ரோட்டரி சங்கம் குடிநீர் இயந்திரம் வழங்கல்

அறந்தாங்கி, செப் .26- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பில், மாற்றுத்திறன் மாணவர்கள் மையத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு ஃபோர்ட் சிட்டி ரோட்டரி சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் தெய்வரெத்தினம் தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஸ்ரீ தேவி வரவேற்றார்.

சங்கத்தின் பொருளாளர் மருத்துவர் செல்வ செந்தமிழ் செல்வன், ஆர்ஆர்ஏ டெக்னாலஜி நிர்வாக இயக்குவர் ரியாஸ் அகமது ஆகியோர் முன்னிலையில் முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர் பா.வெங்கடேசன் தனித்திறன் மாணவர்கள் மையத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கினார்.

சங்கத்தின் செயலாளர் முனைவர் முபாரக் அலி, மாணவர்கள் அனைவருக்கும் பரிசுகளை வழங்கினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னாள் பொருளாளர் அப்துல் காதர், நகராட்சி பள்ளி துணை தலைமை ஆசிரியர் நிர்மல் சகில்தா, மையத்தின் பொறுப்பு ஆசிரியர் ரேவதி ஆகியோர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.

தனித்திறன் மாணவர்கள் மையத்தின் இயன்முறை மருத்துவர் சரவணன் நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram