தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரோசல்பட்டி ஊராட்சியில் 21 இடங்களில் தேங்கியிருந்த 1.5 டன் குப்பைகள் அகற்றம்

29 Oct 2026, 9:12 pm
ரோசல்பட்டி ஊராட்சியில் 21 இடங்களில்  தேங்கியிருந்த 1.5 டன் குப்பைகள் அகற்றம்

ரோசல்பட்டி ஊராட்சியில் 21 இடங்களில் தேங்கியிருந்த 1.5 டன் குப்பைகள் அகற்றம்

விருதுநகர், அக்.29-விருதுநகர் ஒன்றியத் துக்கு உட்பட்ட ரோசல்பட்டி ஊராட்சியில், 21 இடங்களில் நீண்ட காலமாகத் தேங்கியிருந்த 1.5 டன் குப்பைகள் சிறப்புத் தூய்மைப் பணியின் மூலம் அகற்றப்பட்டன.

விருதுநகர் நகராட்சியை ஒட்டியுள்ள ரோசல்பட்டி ஊராட்சிப் பகுதிகளில் நீண்ட நாட்களாக அகற்றப் படாமல்இருந்த கழிவுகளை அகற்றும் வகையில் சிறப் புத் தூய்மைப் பணி மேற் கொள்ளப்பட்டது.இதில் கூரைக்குண்டு, சிவஞானபுரம், பாவாலி, சத்திரரெட்டியபட்டி, ரோசல் பட்டி ஆகிய ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் ஒன்றிணைந்து ஈடுபட்டனர். சாலையோரங்களில் கிடந்த குப்பைகள் மட்டுமின்றி, ரோசல்பட்டி ஊரணிக் கரை மற்றும் சக்கம்மாள்புரம் வரத்துக் கால்வாய் பகுதி உள்ளிட்ட 21 இடங்களில் தேங்கியிருந்த மொத்தம் 1.5 டன் குப் பைகள் அகற்றப்பட்டன.

இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், மீதமுள்ள நான்கு ஊராட்சிகளிலும் தீவிரத் தூய்மைப் பணி மேற் கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்தனர். இப்பணிக்கு பொதுமக்கள் வரவேற்புஅளித்துள்ளனர்.

இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட வல்லுநர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சிச் செயலாளர்கள், வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் பங்கேற் றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.