தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குப்பைகளை அகற்றாத ரோசல்பட்டி ஊராட்சி சுகாதாரச் சீர்கேட்டில் முத்தால் நகர்

9 May 2026, 9:22 pm
குப்பைகளை அகற்றாத ரோசல்பட்டி ஊராட்சி சுகாதாரச் சீர்கேட்டில் முத்தால் நகர்
<p><strong>குப்பைகளை அகற்றாத ரோசல்பட்டி ஊராட்சி சுகாதாரச் சீர்கேட்டில் முத்தால் நகர்</strong></p><p>விருதுநகர், மே 9- விருதுநகர் அருகேயுள்ள ரோசல்பட்டி ஊராட்சி பகுதியில் குப்பை களை அள்ளும் பணி நடைபெற வில்லை. இதனால் சுகாதாரச் சீர்கேடு நிலவி வருகிறது. விருதுநகர் ஒன்றியத்திற்கு உட் பட்டது ரோசல்பட்டி ஊராட்சி. இங் குள்ள 20 ஆயிரம் குடியிருப்புகளில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக் கள் வசித்து வருகின்றனர். இந்நிலை யில், ஊராட்சி நிர்வாகம், நாள்தோறும் வீடு, வீடாகச் சென்று குப்பைகளை அள்ளும் பணியினைச் செய்வதில்லை. இதன் காரணமாக, அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்புவாசிகள் வேறு வழி யின்றி குப்பைளை பொது இடங்களில் கொட்டி வருகின்றனர். அதைக் கூட ஊராட்சி நிர்வாகத்தினர் தூய்மை பணியாளர்கள் மூலம் அகற்றுவதில்லை. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிளைச் செயலா ளர் நாகேந்திரன் கூறுகையில், ரோசல்பட்டி ஊராட்சி முழுவதும் எங்கு பார்த்தாலும் குப்பைகள் குவி யல் குவியலாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக முத்தால் நகர் பகுதியில் உள்ள மின்மாற்றியின் முன்பு குப்பை கள் குவிந்து கிடக்கிறது. எதிர்பாராத விதமாக திடீரென குப்பைகளில் தீப்பற்றினால், மின்மாற்றியும் சேத மடைவதோடு, பெரும் விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. எனவே, குப்பைகளை அகற்ற வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக விருதுநகரில் தொடர் மழை பெய்து வருகிறது. மழைநீரில் குப்பைகள் நனைந்து விட்டதால், அதில் இருந்து துர்நாற்றம் அடிக்கத் துவங்கியுள்ளது. இதேநிலை நீடித்தால், கொசுக்கள் அதில் உருவாகி டெங்கு உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான பல்வேறு நோய்கள் அங்கு பரவும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார். எனவே, ரோசல்பட்டி ஊராட்சி பகுதி யில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றிட மாவட்ட ஆட்சி யர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.