தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

9 Feb 2026, 3:02 pm
சென்னை விரைவு செய்திகள்

எல்ஐசி லாபம் ரூ.34 கோடி

சென்னை, பிப்.9- டிசம்பர் 31-வுடன் முடிவடைந்த 9 மாதங்களில் எல்ஐசி நிறுவனத்தின் லாபம் 16.68 விழுக்காடு அதிகரித்து ரூ.33,998 கோடியாக உயர்ந்துள்ளதாக நிர்வாக இயக்குநர் ஆர்.துரைசாமி தெரிவித்துள்ளார். தனிநபர் மற்றும் குழும வணிக பிரீமியங்கள் கணிசமான வளர்ச்சியைப் பெற்றுள்ள நிலையில், புதிய வணிகத்தின் மதிப்பு 27.96% உயர்ந்துள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் காப்பீட்டு விழிப்புணர்வை ஏற்படுத்த ‘பீமா சகி’ யோஜனா மூலம் பெண் முகவர் படையை உருவாக்குவதில் நிறுவனம் தீவிரமாக உள்ளது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 2,97,028 பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். டிஜிட்டல் மேம்பாடுகள் மற்றும் அரசின் ஜிஎஸ்டி 2.0 போன்ற முயற்சிகள் நிறுவனத்தின் வளர்ச்சிக்குச் சாதகமாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பட்டுச் சேலைகள் திருட்டு

சென்னை, பிப்.9-  சென்னை தி.நகரில் உள்ள ஜவுளிக்கடையில் சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள பட்டுச் சேலைகளைத் திருடிய ஊழியர் சுரேஷ் என்பவரை காவல்துறையினர்  கைது செய்தனர்.  கடந்த 3 ஆண்டுகளாக இத்திருட்டில் ஈடுபட்டு வந்த சுரேஷ், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசி, அவர்கள் தேர்வு செய்யும் சேலைகளைத் திருடி பாதி விலைக்கு விற்று வந்துள்ளார். கண்காணிப்பு கேமரா மூலம் பிடிபட்ட இவருக்கு, கடையில் பணிபுரியும் மேலும் இரு ஊழியர்கள் உடந்தையாக இருந்து கமிசன் பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்தது.

ஐடி ஊழியர்களுக்கு  50விழுக்காடு வாடகை சலுகை

சென்னை, பிப்.9-  ஒன்றிய அரசின் ‘புதிய வருமான வரிச் சட்டம் 2025’-ன் கீழ், பழைய வரி முறையைப் பின்பற்றுபவர்களுக்கான வீட்டு வாடகைப்படி  சலுகை 2 ஆம் நிலை நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதுவரை சென்னை, தில்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய பெருநகரங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட இந்த வாடகைப்படி வரி விலக்கு, இனி பெங்களூரு, ஹைதராபாத், புனே மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு கல்விப்படி மாதம் ரூ.100-லிருந்து ரூ.3,000 ஆகவும், விடுதிச் செலவுப்படி மாதம் ரூ.300-லிருந்து ரூ.9,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. வரி நடைமுறைகளை எளிதாக்க விதிகள் மற்றும் படிவங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வருமான வரிச் சலுகை கோர பட்டயக் கணக்காளர் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ள இந்த புதிய விதிகள், வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரவுள்ளன.

மல்லிகை விலை  கிலோவுக்கு ரூ.3,500 சரிவு

சென்னை, பிப்.9- பனிப்பொழிவு குறைந்து வெயில் தொடங்கயுள்ளதால், தமிழகத்தின் முக்கியப் பூ சந்தைகளில் மல்லிகைப் பூக்களின் வரத்து அதிகரித்து விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. கடும் பனி காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு கிலோ ரூ.8ஆயிரம் வரை விற்கப்பட்ட மல்லிகை, தற்போது வரத்து அதிகரிப்பால் சத்தியமங்கலம் சந்தையில் ஒரே நாளில் ரூ.3,500 குறைந்து, கிலோ ரூ.1,350-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், நிலக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் விளைச்சல் பன்மடங்கு பெருகியுள்ளதால், அங்கு மல்லிகை விலை கிலோ ரூ.500 முதல் ரூ.1,000 வரை சரிந்துள்ளது. கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், வரும் நாட்களில் விளைச்சல் மேலும் அதிகரித்து பூக்களின் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தங்கம் விலை உயர்வு

சென்னை, பிப்.9- சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை திங்களன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,17,200க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ரூ.14,650க்கு விற்பனை செய்யப்பட்டது.வெள்ளி கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.15,000 உயர்ந்து ரூ.3லட்சத்திற்கு  விற்பனை செய்யப்பட்டது.

பசுமை எஃகு சான்றிதழ் வழங்கல்

சென்னை, பிப்.9- ஒன்றிய அரசின் எஃகு அமைச்சகத்தின் புதிய பசுமை எஃகு வகைப்பாட்டின் கீழ், பசுமை எஃகு சான்றிதழ் ஆர்சிலர் மிட்டல் நிப்பான் ஸ்டீல் இந்தியா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.   இந்நிறுவனத்தின் 'ஹாட் ரோல்டு' தயாரிப்புகள் நான்கு நட்சத்திர மதிப்பீட்டையும், 'கோல்டு ரோல்டு' தயாரிப்பு கள் மூன்று நட்சத்திர மதிப்பீட்டையும் பெற்றுள்ளன. ஒரு டன் எஃகு உற்பத்திக்கு 2.2 டன்க ளுக்கும் குறைவான கார்பன் வெளி யேற்றத்தைக் கொண்ட தயாரிப்புகளுக்கே இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது. வாகனத் துறை மற்றும் கட்டுமானத் துறை யினருக்குப் பெரும் உதவியாக அமையும் இச்சான்றிதழ் குறித்து, நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திலீப் ஊமன் கூறியுள்ளார்.

கொடைக்கானல் மற்றும் மாமல்லபுரத்தில்  ரோப்வே: அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்

சென்னை, பிப்.9-  கொடைக்கானலில் உயரமான மலைப்பகுதி ரோப்வே (Ropeway) போக்கு வரத்து மற்றும் மாமல்லபுரத்தில் கேபிள் கார் போக்குவரத்து அமைப்பதற்கான விரி வான சாத்தியக்கூறு அறிக்கைகளைத் தயாரிக்க, சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் ஒப்பந்தம் வழங்கி யுள்ளது. சுற்றுலா மற்றும் பிராந்திய இணைப்பை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டங்களை ஆய்வு செய்ய, புது தில்லியைச் சேர்ந்த வாப்கோஸ் லிமிடெட் (WAPCOS Limited) நிறுவனம் ஆலோசகராக நிய மிக்கப்பட்டுள்ளது. இதற்காகக் கொடைக் கானல் திட்டத்திற்கு ரூ.78.28 லட்சமும், மாமல்லபுரம் திட்டத்திற்கு ரூ.71.93 லட்சமும் ஆலோசனைக் கட்டணமாக நிர்ண யிக்கப்பட்டுள்ளது. 120 நாட்களுக்குள் தொழில்நுட்பச் சாத்தியக்கூறு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து இந்த நிறுவனம் ஆய்வு செய்யும்.

கடலூர் - புதுச்சேரி எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு

கடலூர், பிப்.9- கடலூர் மாவட்ட ஆட்சியர்  சிபி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் ஏ. குலோத்துங்கன் ஆகி யோர் தலைமையில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு எல்லைப்பகுதி பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் கடலூரில்  நடைபெற்றது. இதில் தேர்தல் ஆணை யத்தின் அறிவுறுத்தல்படி, இரு மாநில எல்லைகளிலும் பணம், மதுபானம், ஆயுதங்கள் மற்றும் இல வசப் பொருட்கள் கடத்தப்  படுவதைத் தடுக்கக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இரு மாவட்ட பாதுகாப்புப் படை யினரிடையே புலனாய்வுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது மற்றும் பாது காப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கம்

சென்னை, பிப்.9- உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி அப்பல்லோ புற்றுநோய் மையம் மற்றும் அப்பல்லோ புரோட்டான் புற்றுநோய் மையம் இணைந்து ‘ஜீரோ டு ஹீரோ’ என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன. இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், 2024-ஆம் ஆண்டில் 15 லட்சத்திற்கும் அதிகமான புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. சுமார் 70 சதவீத பாதிப்புகள் முற்றிய நிலை யிலேயே கண்டறியப்படுவதால், சிகிச்சை கடினமாவதோடு உயிரிழப்பு அபாயமும் பொருளாதாரச் சுமையும் அதி கரிக்கின்றன. இதனைத் தவிர்க்க, தொடக்க நிலையிலேயே நோயைக் கண்டறிந்து குணப்படுத்துவதே இந்தப் பிரச்சாரத்தின் நோக்கமாகும் என்று பெருங்குடல் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன் கூறினார்.  தேவையில்லாமல் உடல் எடை குறைதல், தொடர்ச்சியாக இருமல், பெண்க ளுக்கு மொனேபாஸ் நின்ற பிறகும் ரத்தப்போக்கு, சாப்பிட்டவுடன் வாந்தி,  குமட்டல் உள்ளிட்டவை புற்றுநோயின் அறி குறிகள் என்று  மூத்த ஆலோசகர் டாக்டர் செந்தில்குமார் கூறினார். மகளிர் சுயமாக மார்பகங்களை பரிசோதித்துக்கொள்வதன் மூலம் மார்பக புற்றுநோயை ஆரம்பத்தி லேயே கண்டுபிடிக்கமுடியும் என்று டாக்டர் ஆஷா ரெட்டி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.