தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சவானாவின் வேர்கள் : ஆப்பிரிக்கப் பழங்குடிகளின் ஆதி ஆன்மா - அ.குமரேசன்

8 Mar 2026, 3:42 pm
சவானாவின் வேர்கள் : ஆப்பிரிக்கப் பழங்குடிகளின் ஆதி ஆன்மா - அ.குமரேசன்
<p><strong>சவானாவின் வேர்கள் : ஆப்பிரிக்கப் பழங்குடிகளின் ஆதி ஆன்மா</strong></p> <p>ஹாலிவுட் சினிமாக்கள் சித்தரிக்கும் &ldquo;ஆபத்தான காட்டுவாசிகள்&rdquo; என்ற பிம்பத்தை உடைத்து, அவர்கள் தங்கள் நிலத்திற்காகவும் தன்னாளுமை உரிமைக்காகவும் போராடும் மானுடர்கள் என்பதை உரக்கச் சொல்கிறது தீபா ஜெயபாலன் எழுதியுள்ள &lsquo;சவானாவின் வேர்கள்&rsquo;. ஆப்பிரிக்காவின் பத்து பழங்குடி இனங்களின் வாழ்வியலை வெறும் தகவல்களாக அல்லாமல், புனைவு கலந்த சிறுகதைகளாக இந்நூல் ரத்தமும் சதையுமாக முன்வைக்கிறது. மண்ணும் அடையாளமும் மசாய், சம்புரு, ஹிம்பா, டோகோன் எனப் பத்து வெவ்வேறு பழங்குடி இனங்களின் வேர்களைத் தேடிச் செல்லும் இப்பயணம், சவானா புல்வெளிகளின் தனித்துவத்தைப் பேசுகிறது. நிலப்பரப்பை வெறும் வாழ்வாதாரமாக மட்டும் பார்க்காமல், அதையே தங்களின் அடையாளமாகவும் ஆன்மாவாகவும் கருதும் இப்பழங்குடிகளின் நிலத்தை, காலனியாதிக்க அரசுகள் எப்படிக் கேளிக்கை வளாகங்களாக மாற்றத் துடிக்கின்றன என்பதை நூல் தோலுரிக்கிறது. பண்பாட்டுச் செழுமை ஒவ்வொரு கதையிலும் அந்தந்த இனத்தின் மொழி நுட்பம், நட்சத்திரங்களின் நகர்வுகளைக் கணிக்கும் அறிவு, இசை, உடலில் தீட்டப் படும் வண்ணக் கோடுகளின் நோக்கம் என அவர்களின் பண்பாட்டுச் சிறப்புகள் விரிவாகப் பதிவாகியுள்ளன. அறிவில்லாத அநாகரிகர்கள் என முத்திரை குத்தப்பட்டவர்களின் பின்னால் இருக்கும் இவ்வளவு பெரிய அறிவுச் செழுமையை வாசிக்கும்போது வாசகர்கள் பிரமிப்படைவார்கள். சூழ்ச்சியும் போராட்டமும் வனப் பாதுகாப்புச் சட்டங்களின் பெயரால் பூர்வகுடிகளைத் தங்களின் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றும் அதிகார வர்க்கத்தின் சூழ்ச்சியும், அதைத் தடுப்பதற்காக இளையவர்களும் முதியவர்களும் ஒன்றிணைந்து நடத்தும் போராட்டங்களும் கதைகளில் சித்திரமாகின்றன. இவர்களின் கதைகளைப் படிக்கும்போது, நம் நாட்டுப் பழங்குடிகளின் நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றுகிறது. பாலின சமத்துவமும், அரசியல் தெளிவும் கொண்ட இச்சமூகங்களின் உரையாடல்கள் மிக யதார்த்தமாகப் படம்பிடிக்கப்பட்டுள்ளன. பரிணாம அறிவியலின்படி மனித இனம் தோன்றிய ஆப்பிரிக்கக் கண்டத்தின் இந்தப் பூர்வகுடிக் கதைகள், நாம் அனைவரும் &ldquo;ஒரே தாய் மக்கள்&rdquo; என்ற விசாலமான புரிதலை ஏற்படுத்துகின்றன. ஆப்பிரிக்கப் பழங்குடிகளை நம் உறவுகளாக உணர வைக்கும் இந்த நூல், ஒரு முக்கியமான சமூக ஆவணம். சவானாவின் வேர்கள் ஆசிரியர்: தீபா ஜெயபாலன் வெளியீடு: மாற்று மற்றும் பாரதி புத்தகாலயம் பக்கங்கள்: 96 | விலை: ₹110</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.