கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
31 Jan 2026, 5:27 pm

அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை

ஈரோடு, ஜன.31- ஈரோட்டில் அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாநகரம், ஜீவா நகரில் கண்ணம்மாள், மணி மேகலை உட்பட மொத்தம் 3 வீடுகளில், ஆள் இல்லாததை அறிந்த அடையாளம் தெரியாத நபர்கள், அந்த வீடுகளின் பூட்டை உடைத்து 3 பவுன் நகைகள் மற்றும் ரூ.4 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றனர். தொடர்ந்து, வெள்ளியன்று காலை வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த, வீட்டின் உரிமையாளர்கள் உள்ளே சென்ற போது நகைகள் திருடுபோனது தெரியவந்தது. ஈரோடு தாலுகா காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திலிருந்த தடயங்களை சேகரித்த னர். அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, நள்ளிரவில் முகமூடி அணிந்த வந்த அடையாளம் தெரியாத நபா்கள் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இச்சம்பவத்தால் அப்ப குதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சந்தன மரம் கடத்தல்

சேலம், ஜன.31- சேலம் மாவட்டம், வாழப் பாடி அருகே வெள்ளாள குண்டம் பகுதியில் வனத்து றையினர் வனப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டி ருந்த பொழுது சட்டவிரோ தமாக சந்தன மரங்களை வெட்டி கடத்த முயற்சித்த கும்பலை வளைத்து பிடித்து கைது செய்தனர். இதில், நெய்ய மலைப்பகுதியை சேர்ந்த மகேந்திரன், காளி யப்பன், மயில்சாமி, மற்றும் தாண்டனூர் பகுதியை சேர்ந்த செல்லமுத்து, ஆகிய நான்கு பேரிடம் இருந்து செதுக்கி சுத்தம் செய்த 20 கிலோ சந் தன மர துண்டுகள், சந்தன மர வெள்ளடை துண்டுகள், சிறாய்கள் 80 கிலோ மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட் டவைகளை பறிமுதல் செய்த னர். 4 பேரையும் கைது செய்து சேலம் மத்திய சிறை யில் அடைத்தனர்.

குடியிருப்பு அருகே புலி நடமாட்டம்

உதகை, ஜன.31- நெலாக்கோட்டை பகுதியில் வனத்தை ஒட்டியுள்ள குடியிருப்புகள் அருகே புலி நடமாட்டத்தால் அப்பகுதி பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளை ஒட்டி தேயிலைத் தோட்டங்கள் மற்றும் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இதனால் வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக யானை கள், புலி, சிறுத்தை போன்ற வன விலங்குகள் நடமாட்டத்தால் மக்கள் நாள்தோறும் அச்சமடைந்து வருகின்றனர். இந்நிலை யில், நெலாக்கோட்டை பகுதியில் குடியிருப்புகள் அருகே இருந்த வனப்பகுதியில் புலி அமர்ந்தவாறு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. இதைக்கண்ட பொதுமக்கள் அச்சமடைந்து அதை வீடியோ பதிவு செய்தனர். தற்போது அந்த காட்சிகள் வைரலாகியது. இந்நிலையில், சனியன்று விமலகிரி பகுதி யில் தேயிலைத் தோட்டத்தில் புலி சுற்றித்திரிந்தது. இதனை காரில் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தேயி லைத் தோட்டத்திற்குள் மெதுவாகச் சென்ற புலி, வாகனங்கள் வருவதை கண்டு சாலையை கடக்காமல் நின்றது. அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் நல்வாய்ப்பாக தப்பினார். பகல் நேரத்தில் சுற்றித்திரியும் புலி நடமாட்டத்தை வனத்துறை யினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மேலும், கூண்டு வைத்து, அந்த புலியை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வேலியில் சிக்கி மான் உயிரிழப்பு

கோபி, ஜன.31- கோபிசெட்டிபாளையம் அருகே கம்பி வேலியில் சிக்கி புள்ளி மான் உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கல்லூரி பகுதியில் அடர்ந்த வனத்தில் கடந்த பல மாதங்களாக புள்ளிமான்கள் நடமாட்டம் காணப்படுகிறது. இந்நிலையில், சனியன்று வனத்திலிருந்து வெளியேறி வழி தவறி வந்த நான்கு வயது ஆண் புள்ளிமான், தனியார் நிலத்தை கடக்க முயன்றது. அப்போது கம்பி வேலி இருப்பது தெரியாமல் வேகமாக ஓடி வந்து மோதியதில், வேலியில் சிக்கி மான் துடிதுடித்துள்ளது. உடனே அக்கம் பக்கத்தினர் வனத் துறையினருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மானை மீட்டபோது, அது ஏற்கனவே உயிரிழந்ததாக தெரியவந்தது.

விளையாட்டுப் போட்டிகள்: ஆட்சியர் பரிசளிப்பு

உதகை, ஜன.31- மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு பரிசுகளை வழங்கினார். இளைஞர்களின் சமூக முன்னேற்றம், உடற்கல்வி, விளையாட்டு, சமூக இணைப்பு மற்றும் உடல், மன ஆரோக்கியத்தை மேம் படுத்தும் நோக்கில் தமிழ்நாடு முழுவதும் முதல்வர் இளைஞர் விளையாட்டு திருவிழா ‘இது நம்ம ஆட்டம் 2026’ எனும் தலைப்பில் ஜன.25 முதல் பிப்.8 ஆம் தேதி வரை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படு கிறது. நீலகிரி மாவட்டத்தில் வட்டார அள வில் நடத்தப்பட்ட கபடி, கைப்பந்து, கேரம், கயிறு இழுத்தல், எரிபந்து ஆகிய போட்டி களில் முதலிடம் பெற்றவர்களுக்கு, மாவட்ட அளவிலான போட்டிகள், உதகை மலைப்ப குதி மேம்பாட்டுத் திட்ட திறந்தவெளி விளை யாட்டு மைதானத்தில் வெள்ளியன்று நடை பெற்றன. இதில் முதலிடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம், இரண்டாமிடம் பெற்றவர்க ளுக்கு தலா ரூ.4 ஆயிரம், மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் பரிசுத்தொகையை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மண்டல முதுநிலை மேலாளர் அருணா, இளை ஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட் டுத்துறை அலுவலர் இந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வெறும் ஆய்வோடு நின்ற திட்டம் தொடரும் தொட்டில் கட்டும் அவலம்

உடுமலை, ஜன.31- மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து ஒரு வருடம் ஆன நிலையிலும், சாலை வசதி செய்யப்படாமல் மலைவாழ் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட உடு மலை வனச்சரகத்தில் குழிப்பட்டி, குருமலை, மாவ டப்பு உள்ளிட்ட 18 மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள ஆயிரக்கணக்கான மக்கள், அவசர மருத்து வத் தேவைக்கு சமவெளிப் பகுதியை அடைய சாலை வசதி இன்றி தவித்து வருகின்றனர். குறிப்பாக, கர்ப்பி ணிகள் மற்றும் நோயாளிகளை தொட்டில் கட்டி, கரடுமுரடான வனப்பாதையில் பல மணி நேரம் சுமந்து வரும் அவலம் தொடர்கிறது. திருமூர்த்திமலை பொன் னாலம்மன் சோலை முதல் குழிப்பட்டி வரையிலான 6 கி.மீ. பாரம்பரிய வழித்தடத்தை பயன்படுத்த வனத் துறையினர் கட்டுப்பாடு விதித்துள்ளதால், மக்கள் 60 கி.மீ. சுற்றிச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள னர். இப்பிரச்சினையை தீர்க்க, கடந்த ஆண்டு ஜன வரி மாதம் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு நடத்தி னார். ஆனால், ஓராண்டு கடந்தும் இதுவரை சாலைப் பணிகள் தொடங்கப்படவில்லை. “சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆகியும், அடிப்படைப் பாதை வசதிக் காக போராடுவது வேதனையளிக்கிறது” என மலை வாழ் மக்கள் குமுறுகின்றனர். வன உரிமைச் சட்டப்படி நிரந்தரச் சாலை அமைத்து, உயிரிழப்புகளை தடுக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மின் நுகர்வோருக்கு சுமை ஏற்படுத்துவதா?

உடுமலை, ஜன.31- உடுமலை கோட்ட மின்வாரியத்தின் பாப்பான் குளம் பிரிவு அலுவலகம் மற்றும் தளி பிரிவு பகிர்மா னத்தில் இருக்கும் மின் இணைப்புகளுக்கான மக்கள் மின்கட்டணம் செலுத்துவது குறித்து மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, பாப்பான்குளம் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட 001 - சாமாராயபட்டி மற்றும் தளி பிரிவுக்கு உட்பட்ட 004 – திருமூர்த்திநகர் ஆகிய பகிர்மானங்களில் இருக்கும் மின் இணைப்புகளில் நிர்வாக காரணங்களால் மின் கணக்கீடு எடுக்காத நிலையில் மேற்படி இரண்டு பகுதியில் இருக்கும் மின் நுகர்வோர்கள் கடந்த 2025 நவம்பர் மாதம் செலுத்திய மின் கட்டணத்தை 2026 ஜனவரி மாதத்திற்கு செலுத்த வேண்டும் என உடுமலை மின் பகிர்மான வட்டத்தின் செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்து உள்ளார். கடந்த சில மாதங்களாக உடுமலை மின்வாரிய அலு வலகத்திற்குட்பட்ட சில பகுதிகளில் மக்கள் கடந்த முறை செலுத்திய மின் கட்டணத்தை இந்த மாதம் செலுத்த வேண்டும் என்று அறிவிப்புகளை வெளி யிட்டுள்ளது. இதற்கு காரணம் மின் கணக்கீடு செய்யாத மின் வாரிய ஊழியர்களை வேறு வேலைக்கு பயன்படுத்தியது தான் காரணம் என்று தெரிய வரு கிறது. உடுமலை மின் வாரிய அதிகாரிகளின் நடவடிக்கை யால் சுமை பொது மக்களுக்கு ஏற்படுகிறது. தொடர்ந்து நான்கு மாதங்கள் மின் கணக்கீடு செய்யாமல் வரும் மாதம் கணக்கீடு செய்யும் போது மின் உபயோகம் அதிகமாக கணக்கீடு வரும். இதனால் மின் கட்டணம் பல மடங்கு அதிகமாக கட்ட வேண்டிய நிலையால் பொது மக்களுக்கு பெரிய சுமையை ஏற்படுத்தும். தமி ழக அரசு வீடுகளுக்கு தரும் இலவச மின்சார திட்டமும் கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட மருந்து விற்பனையை தடுக்க வலியுறுத்தல்

உடுமலை, ஜன.31- மக்களுக்கு தீக்கு ஏற்படுத்தும் தடை செய்யப் பட்ட மருந்துகளை விளைநிலங்களில் பயன்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கு விற்பணை செய்யும் தனி யார் மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தடை செய்யப்பட்ட மருந்துகள் குறித்து விவசாயிக ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேளாண்துறை நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மனிதர்களுக்கு தீக்கு ஏற்படுத்தும் என அரசு தடை செய்த மருந்துகளை லாப நோக்கில் விவசாயிக ளுக்கு விற்பணை செய்யும் தனியார் மருந்து கடை கள் மீது நடவடுக்கை எடுக்க வேண்டும். நடப்பு காலத்தில் விளைநிலங்களில் பயிர் செய்த பயிர்க ளுக்கு தேவையான உரம் மற்றும் பூச்சி மருந்துகள் குறித்து வேளாண்துறை விவசாயிகளுக்கு தெரியப் படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட மருந்துகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் தனியார் உர விற்பணை கடைக ளில் உர விலை மற்றும் இருப்புகள் குறித்து வெளிப் படையாக தகவல் பலகை வைக்க வேண்டும். என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத் துள்ளனர்.

வங்கதேசத்தினர் 4 பேர் கைது

திருப்பூர், ஜன. 31- திருப்பூரில் போலி ஆதார் கார்டுகளை கொண்டு சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்கதேசத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் வீரபாண்டி முத்து நகர் மீனம்பாறை ரோடு பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வங்கதே சத்தை சேர்ந்தவர்கள் வேலை செய்து வருவதாக வீரபாண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் போலீசார் விசா ரணை மேற்கொண்டனர். இதில் அங்கு வேலை செய்த ஷெரீப், ஷோகாக், லிட்டன், ரகீர் ஆகியோர் வங்க தேசத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர் களிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது முத்து நகர் பகுதியில் வட மாநில தொழிலாளர்களுடன் தங்கி இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக பனியன் நிறுவ னங்களில் வேலை செய்து வருவது தெரியவந்தது. மேலும், இவர்களிடம் மேற்கு வங்க மாநிலத்தில் குடியி ருப்பவர்கள் போல் போலி ஆதார் கார்டுகள் இருந்தன. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் அனைவரும் முறையான ஆவணங்கள் இன்றி மேற்கு வங்க மாநிலம் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து திருப்பூர் வந்து வேலை செய்து வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக நான்கு பேரையும் வீரபாண்டி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பேரூராட்சியில் நூறு நாள் வேலை திட்டத்தை அமல்படுத்தக் கோரிக்கை

உடுமலை, ஜன.31- உடுமலை, மடத்துக்குளம் தாலூகாவில் இருக்கும் ஐந்து பேரூராட்சியில் ஒரு பேரூராட்சியில் மட்டுமே நூறு நாள் வேலை திட்டம் அமல்படுத்தபட்ட நிலையில் மீதம் இருக்கும் நான்கு பேரூராட்சியிலும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. உடுமலை தாலூகாவில் தளி ஒரு பேரூராட்சி மட்டுமே உள்ளது. ஆனால் விவசாய வேலைகளை மட்டுமே முழுமை யான வாழ்வாதாரமாக இருக்கும் மடத்துக்குளம் தாலூகா வில் கொமரலிங்கம், மடத்துக்குளம், சங்கரமநல்லூர் மற்றும் கணியூர் என நான்கு பேரூராட்சிகள் உள்ளது. இதில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக கொமரலிங்கம் பேரூ ராட்சியில் மட்டுமே நூறுநாள் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டது. ஆனால் விவசாய வேலைகளை மட்டுமே நம்பி இருக்கும் கணியூர், சங்கரமநல்லூர், தளி பேரூராட்சியில் திட் டம் நடைமுறை படுத்தாத காரணத்தால் பொது மக்கள் மிக வும் பாதிக்கப்படுகிறார்கள். இதுகுறித்து அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கத்தின் மடத்துக்குளம் தாலூகா செய லாளர் மாசணம் தெரிவிக்கையில், மடத்துக்குளம் தாலூகா முழுவதும் விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளதால் மக்க ளின் நலனை கருத்தில் கொண்டு மீதம் உள்ள நான்கு பேரூ ராட்சியிலும் நூறு நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும். எற்கனவே நடைமுறையில் இருக்கும் கொமர லிங்கம் பேரூராட்சியில் அட்டை வைத்துள்ள அனைவருக் கும் வேலை வழங்க வேண்டும், என்றார்.

பிப்.3இல் மின்தடை அறிவிப்பு

உடுமலை, ஜன.31- உடுமலை தாலூகா, கிளுவன்காட்டூர் துணை மின் நிலை யத்தில் உட்பட்ட பகுதிகளில் மின் பாதைகளில் பராமரிப்பு வேலைகள் நடைபெறுவதால் பிப்.3ஆம் தேதி காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும். மின்தடை ஏற்படும் பகுதிகள்: கிளுவன்காட்டூர், எலைய முத்தூர், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சி மேடு, மானுப்பட்டி,கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந் தாபுரம், அமராவதி செக் போஸ்ட், பெரும்பள்ளம், தும்பல பட்டி, குருவப்பநாய்க்கனூர், ஆலாம்பாளையம், சாமராயப் பட்டி, பெருமாள்புதூர், குமரலிங்கம், கொழுமம், ருத்திரா பாளையம், குப்பம்பாளையம், சாரதிபுரம், மற்றும் வீரசோழ புரம் ஆகிய பகுதியில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துவுள்ளார்.

திருப்பூரில் தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு

திருப்பூர், ஜன.31 - பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரில் தொழி லாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு உருவாக்கித் தர ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் என்று திருப்பூர் சைசிங் உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து திருப்பூர் சைசிங் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கருணாம்பிகா எம்.வி.ராமசாமி விடுத்துள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது: இந்திய - ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தத்தை நிறை வேற்றித் தந்த ஒன்றிய அரசு, இந்த ஒப்பந்தம் நடை முறைக்கு வர நீண்டகாலம் எடுத்துக்கொள்ளாமல் விரைவில் பயன்படுத்தும் வகையில் செயலாக்க பணிகளை முடுக்கி விட வேண்டும். மரங்கள் வெட்டப்படுவதை தவிர்க்கவும், விறகு பயன்பாட்டை குறைத்து, மாசு ஏற்படுவதை தடுக்க வும், ‘பைப் லைன் கேஸ்’ எனப்படும் எரிவாயு குழாய் திட்டத்தை திருப்பூரில் நடைமுறைப்படுத்த வேண்டும். தற் போது கொச்சியில் இருந்து ஆழ்குழாய் மூலம் கர்நாடகா செல்லும் ‘பைப் லைன் கேஸ்’ திட்டத்தை விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் திட்டமிட்டு திருப்பூர் நகரத்திற்கும் பயன் படும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டால் உற்பத்தி செலவு பல மடங்கு குறையும். பின்னலாடை வர்த்தகப் போட் டியை சமாளிக்கவும், சுற்றுச்சூழல் மாசு இன்றி சுகாதார மான வாழ்க்கை முறையை உருவாக்கவும் மானிய விலை யில் ‘பைப்லைன் கேஸ்’ வழங்கப்பட வேண்டும். ஒன்றிய அரசு சார்பில், தொழிலாளர்களுக்கான அடுக்கு மாடி குடியிருப்பு வசதிகள் உருவாக்கி கொடுக்கப்பட்டால், எளிதாக திருப்பூரில் குடியிருக்க முடியும் என்ற எண்ணம் உருவாகும். தொழிலாளர்களுக்கும் தரமான, எளிதான, குறைவான வாடகையில் குடியிருப்பு வசதிகள் கிடைக்கும். ஒன்றிய அரசு, இந்த குடியிருப்பு விஷயத்தை பரிசீலினை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். கோவை, பாலக்காடு, ஈரோடு பகுதிகளில் இருந்து தின மும் வேலைக்கு வரும் தொழிலாளர்களுக்கு கூடுதலாக மெமோ ரயில் வசதி அறிமுகம் செய்யப்பட்டால் திருப்பூருக்கு ஏராளமான தொழிலாளர்கள் வருவர்கள் என அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

தகுதியில்லாத வட்டாரக் கல்வி அலுவலர்: ஆசிரியர்கள் முற்றுகை

திருப்பூர், ஜன.31 - திருப்பூர் வடக்கு வட்டாரக் கல்வி அலுவலர் லோ.பூபாலன் தரக்குறை வாக, தகுதியில்லாமல் செயல்படுவ தாகக்கூறி தொடக்கக்கல்வி இயக்கங்க ளின் திருப்பூர் வடக்கு ஒன்றிய கூட்டு நடவடிக்கைக்குழு ஆசிரியர்கள் வெள் ளியன்று வட்டாரக் கல்வி அலுவல கத்தை முற்றுகையிட்டு காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். திருப்பூர் வடக்கு ஒன்றியம், பொங்கு பாளையம் ஊராட்சியில் உள்ள பரம சிவம்பாளையம் பள்ளியை இழுத்து மூடுவேன் என உள்ளாட்சி பிரதிநிதி யிடம் பேசியது, வட்டார கல்வி அலு வலகத்தில் ஆசிரியர்கள், பள்ளிக் குழந் தைகள் பிரச்சனைகள் குறித்து சந் திக்க சென்றால் பெரும்பாலும் அலுவல கத்தில் இருக்காதது, தானடித்த மூப் பாக செயல்படுவது, பள்ளி பார்வைக்கு செல்லும் போது விசில் அடிப்பது போன்ற விசித்திர நடவடிக்கைகளில் ஈடுபடுவது, பதவிக்கு உரிய கண்ணியம் இல்லாமல் செயல்படுவதுடன், ஆசிரி யர் சங்கங்களின் நிர்வாகிகள் மீது காவல் துறையில் பொய் புகார் கொடுப் பது, ஆசிரியர்களை பிச்சை எடுக்க வைப்பேன் என்று சொல்வது என வடக்கு வட்டார கல்வி அலுவலர் லோ. பூபாலன் தனது பதவிக்குத் தகுதியில் லாமல், தரக்குறைவாக செயல்படுவ தால் அவரை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தியும் இந்த போராட்டம் நடை பெற்றது. இப்போராட்டத்திற்கு, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வடக்கு செயலாளர் ர.பாலசுப்பிரமணியன் தலைமை ஏற்றார். தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டாரச் செயலாளர் ராஜ சேகர், தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரி யர் கூட்டணி செயலாளர் ரவிக்குமார், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரி யர் கூட்டணி செயலாளர் நாகராஜ் கணேஷ்குமார், தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ஜோசப், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருப்பூர் வடக்கு மாநகர செயலாளர் மோகன், தமிழக ஆசிரியர் கூட்டணி திருப்பூர் மாவட்ட தலைமை நிலையச் செயலாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் உரையாற்றினர். மாவட்ட கல்வி அலுவலர் நடவ டிக்கை எடுக்க இயக்குநரிடம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட் கள் அவகாசம் கேட்டுள்ள நிலையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக் கப்பட்டது. நடவடிக்கை எடுக்க வில்லை எனில் வியாழனன்று காத்தி ருப்புப் போராட்டம் நடைபெறும் என்று கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித் தனர்.

தீ விபத்து

கோவை, ஜன.31- கோவை, பீளமேடு கிரி யம்மன் கோவில் வீதியில் காசிவிஷ்வநாதன் என்பவ ருக்கு சொந்தமான தெர்மா கோல் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்நிறுவனத்தில் சனியன்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட் டது. நிறுவனத்தில் இருந்த தெர்மாகோலில் வேகமாக பரவிய தீ மளமளவெனப் பர வியது. இதனால் கரும் புகை வெளியேறியதால் வீடுக ளில் இருந்தவர்கள் சிரமத் திற்கு உள்ளாகினர். கரும்புகை அதிகமாக வெளியேறிய நிலையில் சம் பவ இடத்திற்கு வந்த தீய ணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இது குறித்து பீளமேடு போலீசார் விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர். இந்த தீ விபத்தால் பல லட்சம் மதிப்பிளான தெர் மாகோல் உள்ளிட்ட பொருட் கள் தீக்கிரையானது.

தார்ச்சாலை வசதி கேட்டு கோட்டாட்சியரிடம் மனு

தருமபுரி, ஜன.31- குடுமியாம்பட்டி கிராமத்தில் தார்ச்சாலை வசதி ஏற்படுத் தித்தர வலியுறுத்தி அப்பகுதி மக்கள் வருவாய் கோட்டாட்சிய ரிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், குடுமியாம்பட்டி முதல் செல்வசமுத்திரம் வரையிலான சாலை, அப்பகுதி மக்களின் முக்கிய போக்குவரத்துப் பாதையாக இருந்து வருகிறது. இந் நிலையில், கடந்த 2003 ஆம் ஆண்டு “தார்ச்சாலை அமைக்க எவ்வித ஆட்சேபனையும் இல்லை” என நீதிமன்றம் தீர்ப்பளித் தது. மேலும், தீர்ப்பு நகலுடன் சாலை அமைக்க அதிகாரிகள் முயற்சிக்கும் போதெல்லாம், சிலர் தார்ச்சாலை அமைக்க விடாமல் தடுத்து நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அவம தித்து வருகின்றனர். எனவே, நீதிமன்ற உத்தரவுப்படி சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சனியன்று வருவாய் கோட்டாட்சியரி டம் மனு அளித்தனர்.

எம்.எஸ்.எம்.இ துறைக்கு ஜிடிபியில் 1 சதவீதம் நிதி ஒதுக்கீடுக

கோவை, ஜன.31- ஒன்றிய அரசு தாக்கல் செய்யவுள்ள 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், குறு, சிறு தொழில் நிறுவனங்களைப் பாதுகாக்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட வேண் டும் என்று தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம் (டாக்ட்) கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்ட் அமைப்பின் மாவட்டத் தலைவர் ஜேம்ஸ், கடந்த பட்ஜெட்டில் எம்.எஸ்.எம்.இ துறைக்கு ஒதுக்கப்பட்ட 22 ஆயிரம் கோடி ரூபாய் என்பது இந்தியா முழுவதும் உள்ள அலுவலக செலவுகளுக்கே போதுமான தாக இல்லை. இதனால் குறுந்தொழில் துறை கடந்த ஆண்டு முழுவதும் பெரும் ஏமாற் றத்தை சந்தித்துள்ளது. எனவே, இந்த பட்ஜெட்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற் பத்தியில் ஒரு சதவீதத்தை, அதாவது சுமார் 3 லட்சம் கோடி ரூபாயை இத்துறைக்கு ஒதுக் கீடு செய்ய வேண்டும். குறிப்பாக, கடந்த நான்கு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இயந்திரங்களுக் கான 15 சதவீத மானியத்தை மீண்டும் வழங்க வேண்டும். சர்பாசி சட்டத்தின் கீழ் கடன் திருப் பிச் செலுத்தும் கால அவகாசத்தை 90 நாட்களி லிருந்து மீண்டும் 180 நாட்களாக உயர்த்த வேண்டும். மேலும், கோவையின் அடையாள மாக விளங்கும் பம்ப் மோட்டார்கள் மற்றும் கிரைண்டர்கள் சாமானிய மக்களால் பயன் படுத்தப்படுவதால், அவற்றுக்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தில் உள்ள குளறுபடிகளை நீக்கி சீரமைக்க வேண்டும். மூலப்பொருள் விலை தங்கம் போல தினமும் உயர்ந்து வருவதால், சிறு தொழில்கள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. இந்த மூலப்பொருள் விலையேற்றத்தை கட்டுப்படுத்தி நிலை யான விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும். கோவை மாவட்டத்தின் குறுந்தொழில் களை பாதுகாக்க ஒன்றிய அரசு தனியாக நிதி ஒதுக்கி, ஒரு பிரத்யேக குறுந்தொழில் பேட்டையை அமைக்க முன்வர வேண்டும் என்று தெரிவித்தார்.