அரசு குடியிருப்பில் கொள்ளை: மேலும் 3 பேர் கைது
2 Dec 2025, 4:11 pm

எப்.சி. கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு நாமக்கல், டிச.1- மோட்டார் வாகன எப்.சி. கட்டணம் பலமடங்கு உயர்வை ரத்து செய்யக்கோரி நாமக்கல் மாவட்ட மோட்டார் இன்ஜி னியரிங் தொழிலாளர் சங்கத்தினர் டிச.9 இல் வட்டாரப் போக்கு வரத்து அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட முடி வெடுக்கப்பட்டுள்ளது. சிஐடியு மோட்டார் இன்ஜினியரிங் தொழிலாளர் சங்க நாமக்கல் மாவட்டக் குழு கூட்டம் திங்களன்று நடைபெற்றது. இதில், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட ஒன்றிய அரசு அறிவித்துள்ள எப்.சி சான்றிதழ் கட்டண உயர்வை தமிழகத்தில் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி டிசம்பர் 9 ஆம் தேதியன்று திருச்செங்கோடு வட்டாரப் போக்கு வரத்து அலுவலகம் மற்றும் பள்ளிபாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்து வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில், சங்கத்தின் மாநில துணைத்தலைவர் முரு கேசன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ந.வேலுசாமி, மாவட்டத் தலைவர் எம்.ஆனந்தன், செயலாளர் சு.சுரேஷ் உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

37 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் தருமபுரி, டிச.2- தருமபுரி மாவட்டத்தில் முறைகேடாக தயாரித்து பயன் படுத்தி வந்த 37 நாட்டுத் துப்பாக்கிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தருமபுரி மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிரா மப் பகுதிகளில் வசிப்போர், முறைகேடாக நாட்டுத் துப்பாக்கி களைத் தயாரித்து வன விலங்குகளிடமிருந்து தங்களை பாது காத்து வருகின்றனர். சில நேரங்களில் தந்தங்களுக்காக யானைகளையும், பிற விலங்குகளையும் வேட்டையாடும் சம்பவங்களும் நிகழ்கின்றன. இந்நிலையில், துப்பாக்கி வைத்திருப்பதும், தயாரிப்பதும் சட்டப்படி குற்றம் என்பதால் யாரேனும் நாட்டுத் துப்பாக்கிகளை வைத்திருந்தாலோ அல்லது வீட்டில் பதுக்கி வைத்திருந்தாலோ, தாமாக முன்வந்து துப்பாக்கிகளை ஒப்படைத்து சட்ட நடவடிக்கை களிலிருந்து தப்பிக்கொள்ளலாம் என மாவட்ட வன அலுவ லர் கே.ஆர்.ராஜாங்கம் தெரிவித்திருந்தார். அதன்பேரில், தருமபுரி மாவட்டத்தில் வனத்தை ஒட்டியுள்ள அனைத்து கிராமங்களிலும் கடந்த ஆகஸ்ட் மாதம் வனத்துறை சார்பில் அறிவிப்பு மற்றும் விழிப்புணா்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப் பட்டன. இதையடுத்து ஏராளமானோர் நாட்டுத் துப்பாக்கி களை வனத் துறையிடம் ஒப்படைத்தனர். அந்தவகையில் செப்.1 முதல் நவ.27 ஆம் தேதி வரை தருமபுரி மாவட்டத் தில் மொத்தம் 37 நாட்டுத் துப்பாக்கிகள் ஒப்படைக்கப் பட்டுள்ளதாக, ஆர்.ராஜாங்கம் தெரிவித்தார்.

சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல் ஈரோடு, டிச.2- சத்தியமங்கலம் அருகே புறம்போக்கு நிலத்தில் வளர்ந் திருக்கும் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே இக்கரை நெக மம் புதூர் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலங்களில் சந்தன மரங்கள் வளர்ந்துள்ளன. கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் சந்தன மரங்களை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டிக் கடத்தி செல்கின்றனர். இந்நிலையில், அண்மையில் அதேபகுதியில் பொது இடத்தில் இருந்த ஒரு சந்தன மரத்தை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி கடத்திச் சென்றனர். இதனைக்கண்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டு வரும் நபர்களை காவல் துறையினர் விரைந்து கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மண் சரிவை தடுக்க ‘மண் ஆணி’ திட்டம் உதகை, டிச.2- குன்னூர் மலைப்பாதையில் மண்சரிவை தடுக்கும் வகை யில், மண் ஆணி திட்டத்தின் மூலம் பணிகள் நடைபெற்று வருகிறது. மலைப்பகுதிகளில் மண் சரிவை தடுத்து, மக்களை காக்க ‘மண் ஆணி’ திட்டம் என்ற நவீன தொழில் நுட்பத்தை, தமி ழக அரசு செயல்படுத்தி வருகிறது. நீலகிரி மாவட்டம் கடல் மட்டத்தில் இருந்து, 2 ஆயிரம் மீட்டர், அதாவது 6 ஆயிரத்து 600 அடி உயரத்தில் அமைந்துள்ளது. மாவட்டத்தில் நிலச்சரி வால் ஏற்படும் ஆபத்துகள் அதிகம் உள்ளது. இதில் குன் னூர் – உதகை – கோத்தகிரி - மேட்டுப்பாளையம் போன்ற சாலைகளில் நிலச்சரிவை தடுக்க, புதிய தொழில்நுட்பமான மண் ஆணி அமைத்து, நீர் விதைப்பு முறை, ஜியோ கிரிட் முறையில், மண்ணின் உறுதித்தன்மையை அதிகப்படுத்தி வலிமையூட்டும் பணியை, நெடுஞ்சாலைத்துறை அறி முகம் செய்துள்ளனர். தற்போது அதற்காக பணிகள் நடை பெற்று வருகிறது.

விலங்கு தாக்கியதில் 7 ஆடுகள் பலி

மேட்டுப்பாளையம், டிச.2- மேட்டுப்பாளையம் அருகே மொக்கை நகர் பகுதியில் அடையாளம் தெரியாத விலங்கு தாக்கியதில் ஏழு ஆடுகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை பகுதி மொக்கை நகர் பகுதியைச் சேர்ந்தவர் துளசி மணி. இவர் 10த்திற்கும் மேற்பட்ட ஆடுகளை வைத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில், திங்களன்று மாலை அவரது வீட்டின் அருகே இருந்த தோட்ட பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்பட்ட ஆடுகள் அனைத்தும் திடீரென அலறும் சத்தம் கேட்டுள்ளது. இதனைய டுத்து அங்கு சென்று பார்த்த போது 6 ஆடு கள் கழுத்தில் கடிப்பட்ட நிலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்துள்ளது. மேலும் இரண்டு ஆடுகள் காயங்களு டன் உயிருக்கு போராடிய நிலையில், அவற்றை மீட்டு வனத்துறை மற்றும் கால் நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்த னர். கால்நடை மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு ஆடு இறந்தது. இது குறித்து தகவல் கிடைக்க பெற்றதும் சம்பவ இடத்திற்கு சென்ற மேட்டுப்பாளை யம் வனத்துறையினர் இறந்த ஆடுகளை தாக்கியது எந்த வகையான விலங்கு? அப்ப குதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா? என் பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

அரசு குடியிருப்பில் கொள்ளை: மேலும் 3 பேர் கைது

கோவை, டிச.2- அரசு அலுவலர்கள் வசிக்கும் வீட்டு வசதி வாரிய அடுக்கு மாடி குடியிருப்பில் பட்டப் பகலில் நடந்த பெரும் கொள்ளை சம்பவத் திற்கு, திட்டம் தீட்டி உதவிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை, கவுண்டம்பாளையத்தில் அரசு அலுவலர்கள் வசிக்கும் வீட்டு வசதி வாரிய அடுக்கு மாடி குடியிருப்பில் கடந்த நவ.28 ஆம் தேதியன்று பட்டப்பகலில் நடந்த கொள்ளை சம்பவம் கோவை மாநகர காவல் ஆணையத்தை அதிரச் செய்தது. குறிப்பாக நில எடுப்புப் பிரிவு வருவாய் அலு வலரின் வீட்டில் மட்டும் 30 சவரன் தங்க நகை கள் திருடுபோனது போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்தது. சிசிடிவி கேமரா காட்சி களின் அடிப்படையில், உத்தரபிரதேச மாநி லத்தைச் சேர்ந்த ஆசிப் (48), கல்லு ஆரிப் (45), இர்பான் (42) ஆகிய மூன்று பேரை தனிப்படை போலீசார் சுட்டு பிடித்தனர். இதில் ஆசிப் உயிரிழந்தார். விசாரணையில், கொள்ளை கும்பலுக்கு உதவிய மைல்கல் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆயுப்கான் (35) கைது செய்யப்பட்டார். மேலும், கொள்ளை திட்டத்தை முன்கூட்டியே தீட்டி ஆலோசனை வழங்கிய உத்தரபிரதேசம் காசியாபாத்தைச் சேர்ந்த தாவூத் (18), பர்மான் (23) ஆகியோ ரும் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் ஆலோசனையின்படி, கொள் ளையர்கள் குடியிருப்பிற்குள் நுழைந்து கதவுகளை உடைத்து கொள்ளையடித்த தாக விசாரணையில் தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றத் தில் நேர்நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

யானை உயிரிழப்பு

உதகை, டிச.2- நீலகிரி மாவட்டம், தேவர் சோலை தனியார் தேயிலைத் தோட்டத்தில் யானைக்கூட் டம் நடமாடி வந்தது. இந்நி லையில், இந்த கூட்டத்திலி ருந்த யானை ஒன்று, தனியார் நிலத்தில் உயிரிழந்து கிடந் தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையின ருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் வனத்துறை மற்றும் காவல்துறை அதிகா ரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். முழுமையான ஆய்வு மற் றும் விசாரணைக்கு பிறகே, யானை உயிரிழப்பிற்கான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.