நகராட்சி நிர்வாகத்தின் அதிகார மீறலால் சாலையோர வியாபாரிகள் உடமை இழந்து தவிப்பு
5 Feb 2026, 3:40 pm
<p><strong>நகராட்சி நிர்வாகத்தின் அதிகார மீறலால் சாலையோர வியாபாரிகள் உடமை இழந்து தவிப்பு</strong></p>
<p>இராமநாதபுரம், பிப்.5- இராமநாதபுரம் நகராட்சி மற்றும் இராமேஸ்வரம் நகராட்சியில் சாலையோரமாக வியாபாரம் செய்து கொண்டிருந்த வியாபாரிகளை நெடுஞ்சாலைத்துறை மூலமாக எந்த முன்னறிவிப்புமின்றி, பொருட்களை சேதப்படுத்தியும், தகாத வார்த்தை யால் திட்டியும், அவர்களை தாக்கிய நகராட்சி நிர்வாகத்தையும் அதற்கு உடந்தையாக இருந்த காவல்துறை யையும் சாலையோர வியாபாரிகள் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது. சாலையோர வியாபாரிகள் சட்டத்தை மாவட்ட ஆட்சியர், நகராட்சி ஆணை யர் மற்றும் காவல்துறைக்கு வாசித்துக் காட்டும் போராட்டம் நடத்தப் போவ தாகவும் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சிஐடியு சாலை யோர வியாபாரிகள் சங்க இராமநாத புரம் மாவட்ட செயலாளர் இரா.முத்து விஜயன் கூறியதாவது: இராமநாதபுரம் நகராட்சி மற்றும் இராமேஸ்வரம் நகராட்சிக்கு உட்பட்ட சாலையோர வியாபார வியாபாரி களை முன்னறிவிப்பின்றி, விற்பனை குழு கூட்டம் நடத்தி முடிவு செய்யா மலும், 2014 ஆம் ஆண்டு ஒன்றிய - மாநில அரசு நிறைவேற்றிய சாலை யோர வியாபாரிகள் சட்டத்தை துளி யும் மதிக்காமலும் திடீரென நெடுஞ்சா லைத்துறை மூலமாக நகராட்சி நிர்வா கம் மற்றும் காவல்துறையினர் பொருட் களை சேதப்படுத்தி அகற்றியுள்ளது. மேலும், பெண்ணென்றும் பாரா மல் அடித்து அநாகரிகமாக நடந்து கொண்ட நகராட்சி நிர்வாகத்தையும் காவல்துறையையும் சங்கத்தின் சார்பாக வன்மையாக கண்டிக்கி றோம். சாலையோர வியாபாரிகள் சட்டம் குறித்து மாவட்ட ஆட்சித் தலை வருக்கும் நகராட்சி ஆணையருக்கும் மற்றும் காவல்துறைக்கும் வாசித்துக் காட்டும் போராட்டம் நடத்தப்படும் என்றும், மாவட்ட ஆட்சியரின் இந்த தொடர் நடவடிக்கையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற் றும் நகராட்சி அலுவலகம் முன்பாக முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.</p>
<p> </p>
