முந்தய பக்கம்

அனுமதி மறுப்பையும் மீறி சாலையோர வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம்

30 Dec 2025, 4:07 pm
அனுமதி மறுப்பையும் மீறி சாலையோர வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம்
<p><strong>அனுமதி மறுப்பையும் மீறி சாலையோர வியாபாரிகள் காத்திருப்பு போராட்டம்</strong></p> <p>இராமநாதபுரம், டிச.30- இராமநாதபுரம் நக ராட்சி அலுவலகம் முன்பாக, &nbsp;சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் காத்தி ருப்பு போராட்டம் நடைபெற் &nbsp;றது. சாலையோர வியாபாரி களுக்கான 2014 சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதிக் காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் &nbsp;இராமநாதபுரம் பேருந்து நிலையப் பகுதியில் நக ராட்சியால் அடையாள அட்டை வழங்கப்பட்ட சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்ய தடையிடக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட் டம் நடைபெற்றது. இந்தப் போராட்டம் மாவட்டச் செயலாளர் இரா. முத்துவிஜயன் தலைமை யிலும், மாவட்டத் தலைவர் &nbsp;வி.ஆலடீஸ்வரன் முன்னி லையிலும் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்ட &nbsp;துணைத் தலைவர் கே.பச்ச மால், இராமநாதபுரம் கிளை &nbsp;தலைவர் எம். ஆறுமுகக் கனி, கிளைச் செயலாளர் எஸ்.புவனேஸ்வரி, நகராட்சி &nbsp;விற்பனைக்குழு உறுப்பினர் &nbsp;எம்.பாண்டி, இராமேஸ்வ ரம் கிளை தலைவர் அ. முரு கன், கிளைச் செயலாளர் பெ. சின்னத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, இராமநாதபுரம் நகராட்சி மன்றத் தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்ப டையில், போராட்டம் தற்கா லிகமாக ஒத்திவைக்கப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram