தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வணிக வளாகம் கட்டிட பணியை விரைந்து முடிக்க சாலையோர வியாபாரிகள் கோரிக்கை

8 Feb 2026, 3:55 pm
வணிக வளாகம் கட்டிட பணியை விரைந்து முடிக்க சாலையோர வியாபாரிகள் கோரிக்கை
<p><strong>வணிக வளாகம் கட்டிட பணியை விரைந்து முடிக்க சாலையோர வியாபாரிகள் கோரிக்கை</strong></p> <p>சென்னை, பிப். 8- வண்ணாரப்பேட்டை பெரிய மார்க்கெட் வணிக வளாகம் மற்றும் வெங்கட கிருஷ்ணன் தெரு சாலையோர சிறுகடை விற்பனையாளர் சங்கத்தின் முதலாம் ஆண்டு பேரவை கூட்டம் தலைவர் எம்.பச்சையப்பன் தலைமையில் நடைபெற்றது. சின்னராஜ் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். நகர விற்பனைக்குழு உறுப்பினர் எம்.சுகுமார் பேரவையை துவக்கி வைத்து பேசினார். செய லாளர் லட்சுமி வேலை அறிக்கையையும், பொரு ளாளர் விஜயா வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். சென்னை மாவட்டச் செயலாளர் டி.வெங்கட் பேரவையை நிறைவு செய்து பேசினார். முன்னதாக துர்கா வர வேற்றார். கண்ணன் நன்றி கூறினார். தீர்மானங்கள் வணிக வளாகம் கட்டிட பணியை விரைந்து முடிக்க வேண்டும், வெங்கட கிருஷ்ணன் தெருவில் வியாபாரம் செய்யும் கடைகளை முறைப்படுத்த வேண்டும், கழிவறை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், சாலையோர வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியில் வங்கிக் கடன் வழங்க வேண்டும், அத்தியாவசிய தேவைக் &nbsp;காக சாலையோர கடை களை அப்புறப்படுத்தும் போது, மாற்று இடம் வழங்கி விட்டு அப்புறப்படுத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு கவுரவ தலைவராக பி.பூபதி, தலைவராக எம்.பச்சையப்பன், செய லாளராக எஸ்.கண்ணன், பொருளாளராக டி.தமிழ்ச் செல்வி, ஆலோசகராக எம்.சுகுமார் உள்ளிட்ட 13 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.