தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிதம்பரத்தில் சாலையோர கோயில் மற்றும் சாமி சிலையால் தொடர் விபத்து

18 Jan 2026, 4:50 pm
சிதம்பரத்தில் சாலையோர கோயில் மற்றும்  சாமி சிலையால் தொடர் விபத்து
<p><strong>சிதம்பரத்தில் சாலையோர கோயில் மற்றும் &nbsp;சாமி சிலையால் தொடர் விபத்து</strong></p> <p>சிதம்பரம், ஜன.18- கழிவு நீர் செல்லும் இடத்தை அடைத்து கோயில் மற்றும் சாமி சிலை வைத்துள்ளதால் தினந்தோறும் விபத்து ஏற்பட்டு பல பேர் மருத்துவமனைக்கு செல்லும் அவல நிலை ஏற்ப்பட்டுள்ளது. &nbsp;சிதம்பரத்திலிருந்து காட்டு மன்னார்கோவில் செல்லும் சாலையில் சிதம்பரம் நகரத்திற்குட் &nbsp;பட்ட மந்தக்கரையில் வளைவு உள்ளது. சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள், கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் தினந்தோறும் &nbsp;இதன் வழியாக செல்கிறது. &nbsp;இந்த வளைவின் ஓரத்தில் கழிவு நீர் செல்லும் வகையில் சிறு வாய்க்கால் உள்ளது. &nbsp;இந்த வாய்கால் ஓரத்தில் சிறு கோயில் அதன் அருகிலேயே சாமி சிலை வைக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் கால்வாய் மீது அமைக்கப்பட்டுள்ளது. &nbsp;இத னால் கழிவு நீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. &nbsp;மழைக்காலங்களில் இந்த கழிவுநீர் அதிகமாக செல்லும்போது வளை வில் தார் சாலை உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. &nbsp;இந்த வளைவில் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் திரும்பும் போது மிகவும் குறுகிய இடமே உள்ளதால் &nbsp;இருசக்கர வாகனங்களில் அல்லது சாலை யில் நடந்து செல்பவர்கள் அந்த எதிர்பாராத விதமாக பள்ளத்தில் சிக்கி கழிவுநீர் கால்வாயில் விழுந்து அவர்களுக்கு கை, கால்கள் முறிவு ஏற்படுகிறது. &nbsp;தினம் தோறும் பலர் பாதிக்கப் படுவதாக அப்பகுதியில் உள்ள வணிகர்கள் மற்றும் பொது மக்கள் கூறுகின்றனர். &nbsp;கடந்த இரு நாட்களுக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் வந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் சாலையோரப் பள்ளத்தில் &nbsp;தடுமாறி அருகில் இருந்த கழிவுநீர் வாய்க்காலில் விழுந்துள்ளார். உடல் முழுவதும் காயம் ஏற்பட்டு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக இவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு &nbsp;கடலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். &nbsp;எனவே போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள சிறு கோயில் மற்றும் சாமி சிலையை அகற்ற வேண்டும். அதே நேரத்தில் சாலை யில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும் கழிவு நீர் வாய்க்கால் மீது மூடி அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.