கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
17 Dec 2025, 4:11 pm

குப்பை கொட்டும் பிரச்சனை: 10 பேர் மீது வழக்குப் பதிவு திருப்பூர், டிச.17- சின்னகாளிபாளையம் கிராமத்தில் குப்பை கொட்டுவது தொடர்பான பிரச்சனையில் 10 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் இடுவாய் அருகே உள்ள சின்னகாளி பாளையம் கிராமத்தில் குப்பையை தற்காலிகமாக கொட்டி வைக்கும் மாநகராட்சியின் முடிவுக்கு எதிராக செவ்வாய்க்கி ழமை 100 க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். அப் போது கிராம மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், நான்கு காவலர்கள் மற்றும் கிராம மக்கள் 5 பேர் காயமடைந்தனர். இதையடுத்து உடனடி யாக அவர்கள் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், போராட்டக்கா ரர்கள் 145 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத் தில் அடைத்து மாலை விடுவித்தனர். மேலும், இதில் போலீ சாரை தாக்கியதாக 10 பேர் மீது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், மிருக வதை தடைச் சட்டம், ஒன்று கூடி கலகம் செய்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள் ளது.

திருப்பூர் மாவட்டத்தில் பரவலாக லேசான மழை திருப்பூர், டிச. 17 – திருப்பூர் வடக்கு தாலுகாவில் 5 மில்லி மீட்டர், தெற்கு தாலுகாவில் 6 மி.மீ., பல்லடத்தில் 1.50 மி.மீ., தாராபுரத்தில் 8 மி.மீ., மூலனூரில் 5 மி.மீ., உப்பாறு அணைப்பகுதியில் 10 மி.மீ., நல்லதங்காள் ஓடை அணைப்பகுதியில் 10 மி.மீ., வட்ட மலைக்கரை ஓடை அணைப்பகுதியில் 2.40 மி.மீ. என லேசான மழையளவு பதிவாகியுள்ளது. அதேசமயம் அவிநாசி, ஊத்துக்குளி, குண்டடம், காங்கே யம், வெள்ளகோவில் பகுதிகளில் மழை இல்லை. மேலும், உடுமலைபேட்டையில் அதிகபட்சமாக 31 மில்லி மீட்டர், அமராவதி அணைப்பகுதியில் 18 மி.மீ., திருமூர்த்தி அணைப் பகுதியில் 18 மி.மீ., மடத்துக்குளத்தில் 23 மி.மீட்டர் என மித மான மழையளவு பதிவாகியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் சராசரியாக 8 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இருள் சூழ்ந்து காணப்படும் சாலைகள்

திருப்பூர், டிச.17- நொய்யல் ஆற்றின் இருபுறமும் அமைக் கப்பட்ட சாலைகளில் எரியாமல் உள்ள மின் விளக்குகளை உடனடியாக சரி செய்ய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புத னன்று மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகரச் செயலாளர் டி.ஜெயபால் மாநகராட்சி அலுவலகத்தில் அளித்த மனு வில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாநகராட் சியின் பல்வேறு கட்டமைப்பு பணிகள் நடை பெற்று வருகின்றன. மேலும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக நொய்யல் ஆற்றின் இருபுறமும் அமைக்கப்பட்ட சாலை கள் தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு வந் துள்ளன. இந்நிலையில், இந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகள் எரியா மல் கடும் இருள் சூழப்பட்டு காணப்படுகி றது. இதனால், வாகன ஓட்டிகளும் நடந்து செல்வோரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின் றனர். விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. குறிப்பாக பாரப்பாளையம் முதல் பூலாவாரி சுகுமார் நகர் வரை அமைக்கப்பட்ட மின் விளக்குகள் எரியவில்லை. எனவே மாநக ராட்சி நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து நொய்யல் ஆற்றின் இருபுறமும் அமைக்கப் பட்ட சாலைகளில் உள்ள மின் விளக்குகளை சரி செய்ய வேண்டும். அதேபோல் திருப்பூர் மாநகரின் தெற்கு பிரதான பகுதிகளில் சேக ரித்து வைக்கப்பட்ட குப்பைகள் அப்புறப்ப டுத்தாமல் பல நாட்களாக தேங்கி கிடக்கிறது. இதனால் சுற்றுப்புற சீர்கேடும், தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. குறிப் பாக நொய்யல் ஆற்றை ஒட்டி போடப்பட்ட சாலையில் ஆலாங்காடு நடராஜா தியேட்டர் முதல் மேற்கே 500 மீட்டர் தூரத்திற்கு, பூ மார்க் கெட் பின்புறம் ரோட்டை மறித்து மலை போல் குப்பை குவிக்கப்பட்டுள்ளது. வார்டு பகுதிக ளிலும் அப்புறப்படுத்தாமல் தேங்கி கிடக்கி றது. எனவே மாநகராட்சி நிர்வாகம் போர்கால அடிப்படையில் குப்பைகளை அகற்ற நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள் ளது.

வெள்ளகோவில் நகரப் பகுதியில் நில அதிர்வு வெடிச்சத்தம்: ஆய்வு செய்ய வலியுறுத்தல் திருப்பூர், டிச. 17 – திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நகரப் பகுதியில் கடந்த திங்களன்று காலை 10 மணியளவில் மிகப்பெரும் வெடிச் சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது குறித்து உரிய ஆய்வு செய்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் சார்பாக வெள்ளகோ வில் தாராபுரம் சாலையில் வசிக்கக்கூடிய ச.மணிகண்டன் காங்கேயம் வட்டாட்சியருக்கு செவ்வாயன்று புகார் மனு அனுப்பியுள்ளார். இதில் கூறப்பட்டிருப்பதாவது: திங்களன்று காலை 10.13 மணியளவில் வெள்ளகோவில் நகரப் பகுதியில் ஏற்பட்ட வெடிச் சத்தத்தால் நில அதிர்வு ஏற்பட்டது. வீட்டில் இருந்த நான் நில அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்தேன். மேலும் வெள்ளகோவில் நகர பகுதியிலுள்ள பொது மக்களிடம் கேட்டு நில அதிர்வு ஏற்பட்டதை உறுதி செய்து கொண்டேன். உடனடியாக வெள்ளகோவில் கிராம நிர்வாக அலுவலகத்திற் கும், வட்டாட்சியர் அலுவலகத்திற்கும் தகவல் தெரிவிக்கப் பட்டது. வெடிச்சத்தம் மூலம் தொடர்ந்து வரும் நில அதிர்வு குறித்து விசாரித்தபோது, வெள்ளகோவில் பகுதியில் உள்ள கல் குவா ரிகளில் அரசு நிர்ணயித்துள்ள விதிமுறைகளுக்குப் புறம்பாக வணிகரீதியில் பாறைகளில் அதிக ஆழத்திற்கு துளையிட்டு வெடி மருந்துகள் நிரப்பி வெடிக்கச் செய்வதால் தான் நில அதிர்வு ஏற்படுவதாக தெரியவந்தது. இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே வெள்ளகோவில் நகர, ஒன்றியப் பகுதிகளில் செயல்பட்டு வரும் கல் குவாரிகளில் போர்க்கால அடிப்படை யில் ஆய்வு மேற்கொண்டு அரசு விதிமுறைகளுக்குப் புறம் பாக செயல்படும் கல் குவாரிகளின் உரிமத்தை உடனடி யாக ரத்து செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வட்டாட்சியரிடம் ச.மணிகண்டன் கேட்டுக் கொண்டுள் ளார்.